விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இறையும் நிலனும்*  இருவிசும்பும் காற்றும்,* 
    அறைபுனலும் செந்தீயும் ஆவான்,* - பிறைமருப்பின்-
    பைங்கண்மால் யானை*  படுதுயரம் காத்துஅளித்த,* 
    செங்கண்மால் கண்டாய் தெளி.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பிறை மருப்பின் - பிறைபோன்ற தந்தத்தையுடையதும்
பைங்கண் - பசுமைதங்கிய கண்களையுடையதுமான
மால் யானை - பெரியகஜேந்திரனை
படு துயரம் - (முதலையின் வாயிலே அகப்பட்டுப்) பட்ட துக்கத்தில் நின்றும்
காத்து அளித்த - ரக்ஷித்தருளின

விளக்க உரை

உரை:1

“இறையும்“ என்ற உம்மைக்குச் சேர (இரண்டாமடியில்) “ஆவான்” என்ற விடத்திலும் உம்மை கூட்டிக்கொள்ளவேணும்; ஆவானும் என்க. ஆக இவ்வளவால் – உபய விபூதி நாதனாயிருக்கும் பெருமையையுடையவனா யிருந்தாலும் என்றதாயிற்று . இதற்குப் பிரதிகோடியான நீர்மையைப் பின்னடிகளில் அருளிச்செய்கிறார். முதலைவாய்க் கோட்பட்ட கஜேந்திராழ்வான் துயரை அரைகுலையத் தலைகுலைய ஓடிவந்து காத்தருளினது பிரசித்தம். [பிறைமருப்பின் பைங்கண்மால்யானை] யானைக்கு வெளுத்த தந்தமிருப்பதும் பசுமை தங்கிய கண்களிருப்பதும் அதிசயமான விஷயமன்றே; இதைச்சொல்லி வருணிப்பதற்குப் பிரயோஜன மென்னெனில்;- ஒரு குழந்தை கிணற்றில் விழுந்துபோக, அதனையெடுத்துக்கரையிலே போட்டவர்கள் ‘அந்தோ! இதொரு காலழகும் இதொரு கையழகும் இதொரு முகவழகும் என்ன!’ என்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போவர்களன்றோ; அப்படியே எம்பெருமானும் யானையின் காலை முதலைவாயினின்றும் விடுவித்தபின் அதனுடைய தந்தத்தினழகிலும் கண்ணினழகிலும் ஆழ்ந்து கரைந்தமை தோற்ற அந்த பகவத் ஸமாதியாலே ஆழ்வார் யானையை வருணிக்கின்றாரென்க. பசுமை + கண், பைங்கண். கண்டாய் – முன்னிலையசைச்சொல். இப்பாட்டில் நெஞ்சமே!’ என்கிற விளி வருவித்துக்கொள்ளவேண்டும்.

உரை:2

ஏ மனமே! பிறைபோல் வளைந்த தந்தங்களும் அழகிய கண்களும் உடைய கஜேந்திரனின் பெருந்துன்பத்தைப் போக்கி அருள் செய்தவன் செந்தாமரைக் கண்ணனான பெருமான் என்பதை நன்கு அறிந்துகொள்.

English Translation

The Lord who is manifest as the Earth, space, wind, water and fire is the adorable red-eyed senkanmal who gave refuge to the devotee-elephant in distress, Know it clearly.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்