- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
ஆழ்வாரை நோக்கிச் சிலர் ‘உம்முடைய நெஞ்சுபோலே எங்களுடைய நெஞ்சு பகவத் விஷயத்திலே ஊன்றப் பெறவில்லையே, இதற்கு என்ன காரணம்?’ என்று கேட்க; அவர்கட்கு உத்தரமாக அருளிச்செய்வது போலும் இப்பாட்டு. பட்டிமேயவொண்ணாதபடி மனத்தையடக்கி எம்பெருமானோடு தமக்குள்ள உறவை அறிந்திருப்பவர்களின் மனமானது மற்றெவரையும் பற்றாமலும் ஐம்புலன்களிலும் செல்லாமலும் அவ்வெம்பெருமானையே பதறிக்கொண்டு மிக்க ஆவலுடன் சென்று கிட்டும்; ஒரு கன்றுக்குட்டியானது பல்லாயிரம் பசுக்களின் திரளினுள்ளே தனது தாயைக் கண்டுபிடித்துக்கொள்வது எப்படியோ அப்படியே இதுவும் . இதற்கு ஸம்பந்தவுணர்ச்சியே காரணம். ஸம்பந்தஜ்ஞான மில்லாதவர்களுக்கு ஒருநாளும் எம்பெருமானைக் கிட்டுதல் ஸாத்யமன்று; அஃது உள்ளவர்களுக்கு அது மிகவும் ஸுலபம் என்றாராயிற்று.
English Translation
Clearing their hearts of dross, clear-thinking seers of steadfast devotion, easily attain the feet of the Tulasi-garland Lord, like the calf finding the mother-cow through love.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்