- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
திருவேங்கடமுடையானை நோக்கி உனது திருமேனியிலே அழகும் ஐச்வரியமும் சீலம் முதலிய குணங்களும் நிழலிட்டுத் தோற்றுகின்றனவே! என்று ஈடுபடுகிறார். சங்கும் சக்கரமும் திருக்கைகளிலே உள்ளன என்றதனாலும் மலர்மகள் நின்னாகத்தாள் என்றதனாலும் ஈச்வரத்வம் சொல்லப்பட்டது; ‘கார்வண்ணத்துஐய!’ என்ற விளியினால் அழகு அறிவிக்கப்பட்டது. பிரமனுக்கும் சிவனுக்கும் முதன்மையுண்டாகுமாறு திருநாபியிலும் திருமேனியின் வலப்பக்கத்திலும் இடம் கொடுத்திருப்பதைக் கூறுகின்ற பின்னடிகளால் சிலகுணம் தெரிவிக்கப்பட்டது. கைய=கைகளிலேயுள்ளன; ‘கையது’ என்பதன் பன்மை. வலம்புரி- வலப்பக்கத்தால் சுழிந்திருப்பது. (இதற்கு எதிர்- இடம்புரி.) சக்கரத்தின் விளிம்பைச் சொல்லுகிற நேமி என்னும் வடசொல் தமிழில் சக்கரத்துக்கும் பேராக வழங்கும். ஐய!- அண்மைவிளி . மலர்மகள் நின்ஆகத்தாள்=” அகலகில்லேனிறையுமென்று அலர்மேல் மங்கையுறை மார்பன்” திருவேங்கடமுடையானிறே. பிரமன் நான்கு முகங்களாலும் நான்கு வேதங்களையும் எப்போதும் ஓதிக்கொண்டிருப்பதனாலும்,= வேதங்களே எனக்குச் சிறந்த கண்; வேதங்களே எனக்குச் சிறந்த செல்வம்” என்று சொல்லுவனாதலாலும் செய்ய மறையானெனப்பட்டான். இறையான்= ஈச்வரனாகத் தன்னை அபிமானித்திருக்கிற ருத்ரன் என்கை. நின்ஆகத்து இறை= ‘இறை’ என்பதற்குப் பல பொருளுண்டு; உனது திருமேனியிலே சிவன் அற்ப பாகமாக அமைந்திருக்கிறானென்றவாரு. திருவாய்மொழியில் “ ஏறாலுமிறையோனும் திசைமுகனும் திருமகளும் கூறாளுந்தனியுடம்பன்” [4-8-1] என்ற பாட்டின் இருபத்தினாலாயிரப்படி வியாக்கியானத்தில்- ‘தபஸா தோஷிதஸ் தேந விஷ்ணுநா ப்ரபவிஷ்ணுநா ஸ்வபார்ச்வே தக்ஷிணே சம்போ: நிவாஸ: பரிகல்பித:” என்றெடுத்துக் காட்டப்பட்டுள்ள பிரமாண வசனம் இங்கு அநுஸந்திக்கத்தகும். [இதன்பொருள் பரமசிவன் தவம்புரிந்ததனால் திருவுள்ளமுவந்த ஸ்ரீமஹாவிஷ்ணு தனது வலப்பக்கத்திலே அவனுக்கு இடம் கற்பித்துத்தந்தருளினனென்பதாம்.]
English Translation
Your hands, -O cloud-hued Lord! -wield the conch and discus. The lotus-dame Lakshmi resides on your chest. Brahma resides on your lotus-navel, and occupying a small portion of your frame is the three-city destroyer, Siva-lord.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்