விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நின்று நிலம்அங்கை*  நீர்ஏற்று மூவடியால்,* 
  சென்று திசைஅளந்த செங்கண்மாற்கு,* - என்றும்-
  படைஆழி புள்ஊர்தி*  பாம்புஅணையான் பாதம்,* 
  அடைஆழி நெஞ்சே! அறி  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஆழி - சக்கரமானது
படை - ஆயுதமாயிருக்கும்;
புள் - கருடன்
ஊர்தி - வாஹனமா யிருப்பன்;
ஆழி நெஞ்சே - கம்பீரமான மனமே!

விளக்க உரை

தம்முடைய திருவுள்ளத்தை நோக்கி எம்பெருமானுடைய ஸெளசீல்யகுணத்தை உரைக்கின்றார். முன்னடிகளில் உலகளந்த வரலாற்றை எடுத்துரைத்ததன் கருத்து – இப்படிப்பட்ட அவனது மேன்மையைப் பார்த்து நெஞ்சே! நீ பின்வாங்கவேண்டா என்றவாறு. நம்முடைய விரோதிகளைத் தலைதுணிப்பதற்கு அப்பெருமான் கையுந்திருவாழியுமாயிருப்பவன்;நாம் இடர்பட்டால் நம்முடைய கூக்குரல் கேட்டவுடனே சடக்கென ஓடிவந்து நம்மைக் காப்பதற்குப் பாங்காகப் பெரிய திருவடியை வாஹனமாகவுடையவன் என்கிறார் என்றும் படையாழி புள்ளுர்தி என்பதனால்.

English Translation

Alas, O Dark Heart of mine! The Lord Senkanmal who went to Marbali and took a gift of land, then grew and measured the Earth, has a discus for weapon, a bird for vehicle and a serpent for a bed, You must attain his feet, know it.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்