விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அறியும் உலகுஎல்லாம்*  யானேயும் அல்லேன்,* 
  பொறிகொள் சிறைஉவணம் ஊர்ந்தாய்,* - வெறிகமழும்-
  காம்புஏய் மென்தோளி*  கடைவெண்ணெய் உண்டாயைத்,* 
  தாம்பே கொண்டுஆர்த்த தழும்பு.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வெறி கமழும் - பரிமளம் வீசப்பெற்ற
வெண்ணெய் - வெண்ணெயை
உண்டாயை - (களவிலே) அமுது செய்த வுன்னை
தாம்பேகொண்டு - (கையில் கிடைத்ததொரு) தாம்பைகொண்டு
ஆர்த்த - கட்டியதனா லுண்டான

விளக்க உரை

எம்பெருமானுடைய ஸெளலப்ய குணத்தையறியாதார் ஆருமில்லை யென்கிறார். “ ஆங்கொருநாள் ஆய்ப்பாடி, சீரார்கலையல்குல் சீரடிச்செந்துவாவாய், வாரார்வனமுலையாள் மத்தாரப்பற்றிக்கொண்டு, ஏராரிடைநோவ எத்தனையோர்போதுமாய்ச், சீரார் தயிர்கடைந்து வெண்ணெய் திரண்டதனை, வேரார் நுதல்மடவாள் வேறோர்கலத்திட்டு நாராருறியேற்றி நன்கமைய வைத்ததனைப், போரார்வேற்கண் மடவாள் போந்தனையும் பொய்யுறக்கம் ஒராத வன்போல் உறங்கியறிவுற்றுத், தாராந் தடந்தோள்களுள்ளளவுங் கைநீட்டி, ஆராத வெண்ணெய் விழுங்கி அருகிருந்த, மோரார்குடமுருட்டி முன்கிடந்ததானத்தே, ஓராதவன்போல் கிடந்தானைக்கண்டவளும் வாராத் தான்வைத்தது காணாள் வயிறடித்திங்கு, ஆரார் புகுதுவார் ஐயரிவரல்லால், நீராமிது செய்தீரென்றோர் நெடுங்கயிற்றால் ஊரார்களெல்லாருங் காணவுரலோடே, தீராவெகுளியளாய்ச்சிக்கன ஆர்த்து அடிப்ப” (சிறிய திருமடல்) என்ற திருமங்கை யாழ்வாரருளிச்செயல் இங்கே பரமபோக்கியமாக அநுஸந்திக்கத்தக்கது. வெண்ணெயுண்ட குற்றத்திற்காக யசோதைப்பிராட்டி உன்னைக்கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டிவைத்திருந்தனால் உன்னுடம்பு தழும்பேறிக்கிடக்குஞ் செய்தியை நானொருவன் மாத்திரமேயோ அறிவேன், உலகமெல்லா மறியாதோ என்கிறார்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்