விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பெற்றார் தளைகழலப்*  பேர்ந்துஓர் குறள்உருவாய்,* 
  செற்றார் படிகடந்த செங்கண்மால்,* - நல்தா-
  மரைமலர்ச் சேவடியை*  வானவர்கை கூப்பி,* 
  நிரைமலர்கொண்டு*  ஏத்துவரால் நின்று.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கடந்த - அளந்து தன்னுடைய தாக்கிக்கொண்ட
செம் கண் மால் - புண்டரீகாக்ஷனுடைய
நல் தாமரை மலர் சே அடியை - அழகிய தாமரைபோற் சிவந்த திருவடிகளை
வானவர் - இந்திராதி தேவர்கள்
கைகூப்பி - அஞ்ஜலி  செய்துகொண்டு

விளக்க உரை

கிருஷ்ணாவதார காலத்திலும் த்ரிவிக்ரமாவதார காலத்திலும் எம்பெருமானுடைய திருவடித்தாமரைகளை ஏத்தியிறைஞ்சப் பெற்ற பாக்கியசாலிகள் பலரிருந்தனரன்றோ; அப்பாக்கியம் அடியேனுக்கு வாய்க்கவில்லையே! என்று நோவுபடிகிறார். “பெற்றார் தளைகழலப் பேர்ந்தோர்குறளுருவாய்” என்றிருப்பது கொண்டு கிருஷ்ணனாய்ப் பிறந்தபின் வாமநனாய்ப் பிறந்தானென்று கருதவேண்டா; ஒருகாலத்தில் கிருஷ்ணனாய்ப் பிறந்தவனும் மற்றொருகாலத்தில் வாமநனாய்ப் பிறந்தவனுமான ஸர்வேச்வரன் என்றபடி. அன்றி, “பெற்றார் தளைகழலப் பேர்ந்து” என்பதும் வாமநாவதாரச் செயலையே கூறுவதெனவும் கொள்வர்; அப்போது, பெற்றார் என்றது – தன்னை ஆச்ரயிக்கப் பெற்றவர்களென்றபடி; அவர்களுடைய தளையாவது= கருமபந்தம்; அது நீங்கும்படியாகப் பரமபதத்தில் நின்றும் வந்து ஓர் குறளுருவானபடியைச் சொல்லிற்றாகக் கொள்க. செற்றார்படி= செற்றாரென்று சத்ருக்களுக்குப் பெயர்; படி யென்று பூமிக்குப் பெயர்; ஆச்ரிதவிரோதிகளான மஹாபலிபோல்வார் தங்களுடையதென்று அபிமாநித்திருந்த பூமியை என்றதாயிற்று. ஈற்றடியில் “ஏத்துவராம் நின்று” “ஏத்துவரால் நின்று” என்பன பாடபேதங்கள். தங்கள் காரியத்தையே பார்ப்பவரான தேவர்களும் எம்பெருமானது திருவடிகளை ஏத்தியிறைஞ்சப்பெற்றார்களே! என்கிற ஆச்சரியமும் தொனிக்கும்.

English Translation

The wealthy senkanmal, The Lord of adorable red eyes, released his parents from their shackles, escaped the prison haunt of his detractors, and grew up as a child in another house, His lotus-like feet are worshipped with flowers by the good celestials, alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்