விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செவிவாய்கண் மூக்கு*  உடல் என்று ஐம்புலனும்,*  செந்தீ- 
    புவிகால்நீர் விண்பூதம் ஐந்தும்,* - அவியாத-
    ஞானமும் வேள்வியும்*  நல்லறமும் என்பரே,*
    ஏனமாய் நின்றாற்கு இயல்வு.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செம் தீ புவி கால் நீர் விண் பூதம் ஐந்தும் - தேஜஸ் முதலான பஞ்ச பூதங்களினாலியன்ற தேஹமும்
அவியாத ஞானமும் - (இந்தக் கரண களேபரங்களாலே ஸாதிக்கப் படுவதாய்) இடை விடாது எம்பெருமானைச் சிந்திப்பதான பக்தியும்
வேள்வியும் - அந்த பக்தி உண்டாகி வளர்வதற்குக் காரணமான அக்நிஹோத்ரம் முதலிய சடங்கும்
நல் அறமும் - (நாடோறும் பக்தியை வளர்க்கக் கடவதான) விவேகம் முதலிய நற்குணங்களும்
இயல்வு என்பரே - ஸாதனங்கள் என்று சொல்லுகிறார்களே (இது தகுதியோ? என்றவாறு)

விளக்க உரை

‘நமக்கு உபாயமு உபேயமும் எம்பெருமானேயாவன்’ என்கிற சாஸ்த்ரார்த்தம் பலர்க்கும் தெரியுமாயினும் பக்தி முதலானவற்றையும் எம்பெருமானைப் பெறுகைக்கு உபாயமாகச் சிலர் ப்ரமித்திருப்பர்கள். அந்தோ! இப்படியும் சில மஹான்களுங்கூட மயங்கியிருக்கிறார்களே! என்று ஆழ்வாரிரங்குகிறாரிப்பாட்டில். ஆபத்து நேரிடும்போது, தானே வந்து பாதுகாப்பவனன்றோ எம்பெருமான் என்னவேண்டி ஏனமாய் நின்றாற்கு என்கிறார். * மாசுடம்பில் நீர்வாரா மானமிலாப் பன்றியாய்த் திருவவதரித்து அரியன செய்ததெல்லாம் தன்னுடைய நிர்ஹேதுக கிருபையாலேயன்றி வேறொரு உபாயத்தை எதிர்பார்த்தன்றே என்று குறிப்பித்தவாறு. இப்பாட்டின் முதலடியில் இந்திரியங்கள் ஐந்தையும் இரண்டா மடியில் பஞ்ச பூதங்களையும் சொல்லி யிருப்பதன் கருத்தாவது-இந்திரியங்களோடு கூடினதாய்ப் பஞ்ச பூதங்களால் இயன்றதான சரீரத்தைச் சொன்னபடி. சரீரத்தை மோக்ஷஸாதநமாக ஆரும் சொல்லவில்லையே யெனில்; அவியாத ஞானம் என்பதனால் சொல்லப்பட்ட பக்திரூபாபந்நஜ்ஞானமானது கரணகளேபர ஸாத்யமாகையாலே கரணகளேபரங்களுக்கும் பரம்பரையா மோக்ஷ ஸாதநத்வம் சொல்லக்கூடு மென்றுணர்க. அக்நிஹோத்ரம் முதலிய வேள்விகளும் விவேகம் தயை ஸத்யம் முதலிய நற்குணங்களாகிற நல்லறமும் ஸாக்ஷாத் மோக்ஷ ஸாதனமாகக் கொள்ளப்படுகின்றனவோ வென்னில்; அவையும் பக்தி உண்டாகி வளர்வதற்குக் காரணங்களாக சாஸ்த்ரங்களில் சொல்லப்படுகையாலே அவற்றுக்கும் பரம்பரயா மோக்ஷ ஸாதநத்வமே சொல்லகூடும்.

English Translation

The ear and other organs of sense, the five primaeval elements, the five sensory impulses, the five motor impulses, the eternal one within, all these are manifestations of the Lord, who came then as a boar, say the godly ones.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்