விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வாயவனை அல்லது வாழ்த்தாது,*  கையுலகம்-
  தாயவனை அல்லது தாம்தொழா,* - பேய்முலைநஞ்-
  சூணாக உண்டான்*  உருவொடு பேரல்லால்,* 
  காணாகண் கேளா செவி.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பேய் முலை நஞ்சு - பேயான பூதனையின் முலைகளில் தடவியிருந்த விஷத்தை
ஊண் ஆக - உணவாக
உண்டான் - அமுது செய்த கண்ண பிரானுடைய
உருவொடு பேர் அல்லால் - திருமேனியையும் திருநாமத்தையு மல்லது (மற்றெதையும்)
கண் கணா செவி கேளா - கண்கள் காணமாட்டா; காதுகள் கேட்கமாட்டா.

விளக்க உரை

எம்பெருமான் ஆச்ரிதரை ரக்ஷிப்பதிலும் கொடியவர்களைத் தண்டிப்பதிலும் தீக்ஷிதனாயிருக்கின்றான் என்கிற திருக்குணங்களிலே யீடுபட்டுத் தம்முடைய இந்திரியங்கள் அவன் திறத்தே அவகாஹிக்கும்படியைப் பேசுகிறாரிதில். உலகம் தாயவன் என்றதனால் ஆச்ரிதரை ரக்ஷிப்பதில் தீக்ஷிதனென்பதும், பேய் முலை நஞ்சு ஊணாகவுண்டா னென்றதனால் கொடியவர்களைத் தண்டிப்பதில் தீக்ஷிதனென்பதும் தெரிவிக்கப்பட்டன வென்க. மூன்றாமடியில், உருவொடு- உருயையும் என்றபடி. உருவையல்லால் கண்காணா பேரையல்லால் செவிகேளா என்று அடைவே அந்வயிப்பது. இது- முறைநிரனிறைப் பொருள்கோள்.

English Translation

The Earth-striding lord then came as a child and drank the breast poison of the ogress with relish. My hands will salute none other than him. My lips will not praise anyone else. My eyes will not see, other than his form. Other than his names, my ears will not hear.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்