விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இயல்வாக ஈன்துழாயான் அடிக்கே செல்ல,* 
    முயல்வார் இயல்அமரர் முன்னம்,*இயல்வாக -
    நீதியால் ஓதி*  நியமங்களால் பரவ,* 
    ஆதியாய் நின்றார் அவர். 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முன்னம் - அநாதிகாலமாக
முயல்வார் - முயற்சி செய்பவர்கள்
இயல் அமரர் - யோக்யதையுள்ள நித்ய ஸூரிகளேயாவர்;
இயல்வு ஆக - பொருத்தமாக
நீதியால் ஓதி - முறைமை தவறாமல் வேதத்தை அத்யயனம் செய்து

விளக்க உரை

எம்பெருமான் திருவடிகளிலே நித்ய கைங்கரியம் செய்வதற்கு தக்க யோக்யதையுடையவர்கள் நித்ய ஸூரிகளேயன்றோ, ஸம்ஸாரிகளான நமக்கொல்லாம் அப்பெருமானைப் பணிந்து உய்தற்கு உரிய விரகு உண்டோ? என்று ஒரு சங்கை உதிக்கக்கூடுமே; அதற்கு உத்தரமாக அவதரித்த பாசுரம் இது. நிதயஸூரிகள் தாம் எம்பெருமான் திருவடிகளிலே ஆழ்ந்திருப்பவர்; இருக்கட்டும்; ஸம்ஸாரிகளுக்கு பகவத் ஸமாச்ரயண யோக்யதையே கிடையாதென்று கொள்ள இடமில்லை ஸம்ஸாரிகளும் வேதங்களை யோதி அவற்றின் பொருள்களைத் தெரிந்துகொண்டு படிப்படியாகத் திருந்தி எம்பெருமானை வந்து கிட்டும்படியாக அப்பெருமான்தானே மூல ஸுக்ருதமாக அமைந்திரா நின்றானென்கிறார் . இப்படியருளிச்செய்வதன் கருத்து யாதெனில்; எம்பெருமானை யடைவதாகிற காரியம் சேதநருடைய தலையிலே கிடப்பதன்று; 1. “எதிர்சூழல்புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய, விதி சூழ்ந்ததா லெனக்கே லெம்மான் திரிவிக்கிரமனையே” என்கிறபடியே நெடுநாளே பிடித்து ஸம்ஸாரியைப் பெறுவதற்கு அப்பெருமான்தானே பலவகையான க்ருஷிகளைப் பண்ணிக்கொண்டிருக்கிறான் என்றவாறு. “ஆதியாய் நின்றாரவர்” என்றதன் கருத்து இதுவே. ஸ்ரீ வேதாந்த தேசிகனும் இதனையே திருவுள்ளம்பற்றி ஸ்ரீ ரஹஸ்யத்ரய ஸாரத்திலே “ நிதாநம் தத்ராபி ஸ்வய மகில நிர்மாண நிபுண:’ என்றருளிச் செய்தா ரென்றுணர்க.

English Translation

All the gods naturally seek the path to attain the feet of the Tulasi-wearing Narayana. Earlier through proper study and practice of their roles, they achieved their states of godly nature.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்