விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மண்ணும் மலையும்*  மறிகடலும் மாருதமும்,* 
  விண்ணும் விழுங்கியது மெய்என்பர்,* - எண்ணில்-
  அலகுஅளவு கண்ட*  சீர்ஆழியாய்க்கு,*  அன்றுஇவ்- 
  உலகுஅளவும் உண்டோ உன் வாய்?   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மண்ணும் - பூமியும்
மலையும் - குலபர்வதங்களும்
மறிகடலும் - அலையெறிகிற ஸமுத்ரங்களும்
மாருதமும் - காற்றும்
விண்ணும் - ஆகாசமும் ஆகிய இவற்றை யெல்லாம்

விளக்க உரை

ஏனமாய் நிலங்கீண்டபோது மிகப்பெரிதான பூமி ஒருகோட்டின் மேலே அடங்கிக் கிடந்த விசித்திரத்தைக் கீழ்ப்பாட்டில் பேசியநுபவித்த ஆழ்வார்க்கு மற்றொரு அற்புதச் செயலும் நினைவுக்கு வந்தது; பிரளயகாலத்தில் சிறிய பாலகனாய் ஏழுலைகையும் அமுது செய்தாயென்று ப்ராமாணிகர்களான வைதிக புருஷர்கள் சொல்லுகின்றனர்; இது ஸத்யமான விஷயமேயன்றி ஈஷத்தும் அஸத்யமல்ல; சிறியவாயினாலே பெரியவுலகங்களை அமுதுசெய்யக் கூடமையாலே உலகுண்ட அக்காலத்தில் உனது வாயும் உலகங்களின் பெருமைக்குத் தகுதியாகப் பெருத்திருந்ததோ என்று வினவுகின்றார். இங்ஙனே கேள்வி கேட்கிற முகத்தால் எம்பெருமானுடைய ஒப்புயர்வற்ற சக்தி விசேஷத்தை வெளிப்படுத்துகின்றாராழ்வார் என்றுணர்க. சிறிய வாயினாலே பெரியவுலகங்களை எல்லாம் எளிதில் விழுங்கவல்ல அபாரசக்தியுக்தனன்றோ நீ என்றவாறு. [அலகளவுகண்டசீர்] நூறு ஆயிரம் பதினாயிரம் லக்ஷம் கோடி சங்கம் மஹாசங்கம் பத்மம் என்றாற்போன்ற எண்கள் அலகு எனப்படும்; அவற்றை அளவுகாண்கையாவது-அந்த எண்களின் எல்லைக்குத் தாள் மேற்பட்டுபோதல்; அளவுகடந்து போவதைச்சொன்னபடி. ‘அஸங்க்யேய கல்யாண குணகணெளகமஹார்ணவ!” என்பர் ஸ்ரீ பாஷ்யகாரரும். சீராழியாய்க்கு = ஆழியென்று ஸமுத்ரத்துக்குப் பெயர்; ஆழியான் – சமுத்ரமாயிருப்பவன்; முன்னிலைப் பெயர் நான்காம் வேற்றுமையுருபு பெற்று “ ஆழியாய்க்கு” என்றாயிற்று; அன்றி, ஆழியையுடையவன் ஆழியான் என்றாகி, எல்லை கடந்த திருக்குணங்களையும் சக்கராயுதத்தையும் உடைய எனக்கு என்று பொருளாகவுமாம்; இதுவே வியாக்கியானத்திற்கும் பொருந்தியதென்க.

English Translation

Alone the Lord of infinite glory! O discus wielder! They say it is true that you swallowed the Earth, the mountains, the oceans, the winds and space. Come to think, was your mouth as big as this Earth?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்