- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
ஓரிடத்திலேயே நின்றுகொண்டிருப்பதை அளப்பதாக யாரும் சொல்லமாட்டார்கள்; ஆகவே, எம்பெருமான் உலகளந்தான் என்று பலரும் சொல்லுகிறார்களே இது எப்படி பொருந்தும்? ஒரு திருவடிக்கும் கீழுலகமும் மற்றொரு திருவடிக்கு மேலுலகமும் சரிசமமாக இடமாகப் போந்துவிட்ட படியால் மாறி மாறி அடியிடுவதற்கு அவகாசமேயில்லையாதலால் அளந்தானென்பது எங்ஙனே சேரும்? என்று ஒரு சமத்காரமாகப் பேசுவார்போல “நீ அளவுகண்ட நெறி அறிகிலேன்” என்கிறார். இதனையே நம்மாழ்வார் திருவிருத்தத்தில்- “கழல்தல மொன்றே நிலமுழுதாயிற்று ஒரு கழல் போய், நிழல்தர எல்லாவிசும்பும் நிறைந்தது,.....அழறலர் தாமரைக் கண்ணன் என்னோ விங்களக் கின்றதே?” (58) என்ற பாசுரத்தினால் விரித்துரைத்தாரென்க. அவ்விடத்து வியாக்கியானத்திலே-”அளக்கைக்கு ஒரு அவகாசம் காண்கிறிலோம்; நின்ற நிலையிலே நின்றாரை அளந்தாரென்ன வொண்ணாதிறே; அடிமாறியிடிலிறெ அளந்ததாவது; இவனிங்கு அளந்தானாக ஒன்றும் காண்கிறிலோமீ!” என்றுள்ள பெரியவாச்சான் பிள்ளையின் ஸ்ரீஸூக்திகளும் இங்கு அநுஸந்திக்கத்தக்கன. “நீ அளவுகண்ட நெறி அறிகிலேன்” என்பதற்கு மற்றும் சிலவகையாகவும் பொருள் கூறுவர். அளவுகாண்கையாவது அளக்கை. [சூருருவிற்பேயளவுகண்ட] “ சூருமணங்கும் தெய்வப் பெண்பெயர்” என்பது நிகண்டு, பூதனை யென்னும் பேய்மகள் தெய்வப் பெண்ணுருவாக வந்தாளோ வென்னில்; கண்ணபிரானுக்குத் தாயாகிய யசோதைபோல வடிவெடுத்து வந்தாளாகையாலும், அவ்வசோதை 1. “தெய்வநங்கை” என்று குலசேகரப் பெருமாளால் கூறப்பட்டிருக்கையாலும் சூருருவின் பேய் என்னக் குறையில்லை யென்க. அன்றி, பதினெண் தேவகணத்தில் பேயும் ஒன்றாகக் கூறப்பட்டிருத்தல் பற்றியும் “சூருருவின் பேய்” என்றாகவுமாம்.
English Translation
You took the Earth, will one foot straddling the space and one foot placed on the ocean's edge. Your grew and grew, I know not how!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்