விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  என்று கடல்கடைந்தது*  எவ்உலகம் நீர்ஏற்றது,* 
  ஒன்றும் அதனை உணரேன் நான்,* - அன்றுஅது-
  அடைத்துஉடைத்து*  கண்படுத்த ஆழி,*  இதுநீ- 
  படைத்துஇடந்து உண்டுஉமிழ்ந்த பார்.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கண்படுத்த - எப்போதும் பள்ளிகொள்ளுமிடமாகக் கொண்டிருக்கப்பெற்ற
ஆழி - ஸமுத்ரமாம்;
இது - (நீரேற்றுப்பெற்ற) இவ்வுலகமானது
நீ - ஸர்வேச்வரனான உன்னாலே
படைத்து - ஸ்ருஷ்டிக்கப்பட்டும்

விளக்க உரை

கடல்கடைந்து தேவர்களுக்குச் சாவாமருந்து எடுத்துத்தந்து அவர்களை ரக்ஷித்ததும், மாவலி பக்கல் மாணுருவாய்ச்சென்று மூவடி நீரேற்றுப்பெற்று உலகளந்து இந்திரனது துன்பத்தைத் தீர்த்தொழித்ததும் ஸ்ரீமந் நாராயணனுடைய உண்மையை விளக்கவல்லன காண்மின் என்கிறார். என்றுகடல்கடைந்தது? என்கிற கேள்வியும் எவ்வுலகம் நீரேற்றது? என்கிற கேள்வியும் கேள்வி கேட்பதில் நோக்குடையனவல்ல; கடல் கடைந்தபோது தோன்றிய திரையும் நுரையும் மாறாமல் இப்போதுதான் கடல் கடைந்ததுபோலத் தோன்றுகின்றதே!; உலகளக்கும் போது வைத்த அடிச்சுவடு மாறாமல் “வாமனன் மண்ணிது” என்னும்படி இதோ தோன்றுகின்றதே! என்று ப்ரத்யக்ஷஸமமாக்க் காட்டுபவர்போலச் சொல்லுகிறபடி. கடல் கடைந்ததும் உலகளந்ததும் என்றைக்கோ நிகழ்ந்ததாயினும் மயர்வற மதிநலமருளப்பெற்ற இவ்வாழ்வாரது அகக்கண்ணுக்கு அச்சரிதைகளெல்லாம் ஸ்பஷ்டமாகத் தோற்றி விளங்குதலால் இங்ஙனே அருளிச்செய்யக் குறையில்லை யென்க. நெடுநாளைக்கு முன்னே நடந்த செயல்கள் ஆழ்வார்க்கு இன்று பரத்யக்ஷம்போல் தோற்றினாலும், ‘ஐயோ! கடல்கடைந்த வக்காலத்து நாம் நேரில்கண்டு மங்களாசாஸனம் செய்யப் பெறவில்லையே! உலகளந்த அக்காலத்திலே காடும் மேடும் தாவின திருவடிகளின் கீழே நம்முடைய தலையை மடுக்கப் பெற்றிலோமே!’ என்கிற வருத்தம் தோன்றி அவ்விழவு விளங்க ஒன்றுமதனையுணரேன்நான் என்கிறார்; அச்செயல்கள் நடந்தகாலத்திலே அவற்றை நான் அநுபவியா தொழிந்தேனே! என்றவாறு. நம்மாழ்வார் *மத்துறுகடை வெண்ணெய்களவினிலுரலிடையாப்புண்ட சரிதையை அநுஸந்தித்ததும்] “எத்திறம்!” என்று மோஹித்து கிடந்தது போல் இவரும் முதலடியில் அநுஸந்தித்த செயல்களிலே மோஹித்து “ஒன்றும் தனையுணரேன் நான்” என்கிறார் என்று முரைப்பர்.

English Translation

The ocean was churned, -when I do not know. The ocean you made a bridge on, parted, and slept on, -was it not that one? You took the Earth-gift, -where, I do not know, the Earth you made, lifted, ate and remade, -was it not this Earth?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்