விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நெறிவாசல் தானேயாய்*  நின்றானை,*  ஐந்து- 
  பொறிவாசல் போர்க்கதவம் சாத்தி,* - அறிவானாம்
  ஆலமர நீழல்*  அறம் நால்வர்க்கு அன்றுஉரைத்த,* 
  ஆலம்அமர் கண்டத்து அரன். 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அன்று - முன்பொரு காலத்தில்,
ஆலமரம் நீழல் - ஆலமரத்தின் நிழலிலே(இருந்துகொண்டு)
அறம் உரைத்த - தருமோபதேசம் செய்தவனும்
ஆலம் அமர் கண்டத்து - விஷத்தைக் கழுத்தளவிலே அடக்கிக்கொண்டுள்ளவனுமான
அரன் - சிவன்

விளக்க உரை

எம்பெருமானுடைய இன்னருளால் ஞான விகாஸம் பெற்ற நானே அவனுடைய ஸ்வரூபம் குணம் சேஷ்டிதம் முதலியவற்றை நன்கு அறியமாட்டாமல், கடலிலே நீஞ்சிக் கரையேறமாட்டாதே கிடந்து அலைவாரைப்போலே அலையா நிற்க, தன் முயற்சியால் சிறிது ஞானம்பெற்ற சிவன் அவற்றை எங்ஙனே அறியவல்லான்? எனக்குத் தெரிந்தவற்றில் ஏகதேசமும் அறியமாட்டாத அவன் தன்னை ஸர்வஜ்ஞனாக நினைத்துக்கொண்டு பகவத் விஷயத்தைத் தான் உபதேசிக்கவல்லவன் போலச் சில சிஷ்யர்களைச் சேர்த்துக் கொண்டு ஆலமரத்தடியிலே உட்கார்ந்துகொண்டு ஆசார்யபதம் வஹித்து எம்பெருமானுடைய தன்மைகளை உபதேசிப்பதாக இழிந்துவிட்டானே! இஃது என்ன அறிவுகேடு! என்று ருத்ரனைப் பரிஹஸித்துப்பேசுகிறார் “அரன் அறிவானாம்” என்ற சொல்லின் காம்பீர்யத்தை நோக்குமின். நானே அறியமாட்டாதிருக்க அவனோ அறியப்போகிறான்; தான் தெரிந்து கொள்ளவும் ப்ரஸக்தியில்லாதிருக்கப் பிறர்க்குப் போதகாசிரியனாக வீற்றிருந்தானே! என்று கர்ஹிக்கிறபடி. ”அரன், நெறிவாசல் தானேயாய் நின்றானை அறிவானாம்” என்று அந்வயிக்க. நெறி என்று வழிக்குப் பேராகையாலே பலனைப் பெறுவிக்கும் வழியாகிய உபாயத்தைச் சொன்னபடி. வாசல் என்று புகுமிடத்துக்குப் பேராகையாலே இறுதியில் அடையத் தக்க பலனைச்சொல்லுகிறது; ஆகவே, உபாயமும் உபேயமும் தானேயாயிருக்கிற எம்பெருமானை என்றதாயிற்று அன்றி, நெறி –ஸ்வரூபத்துக்கு ஏற்ற, வாசல்-உபாயம், தானேயாய் நிற்பவனை என்று முரைக்கலாம். சிவன் ஒரு காலத்திலே அகஸ்தியர் புலஸ்தியர் தக்ஷர் மார்க்கண்டேயர் என்கிற நான்கு முனிவர்களைச் சிஷ்யர்களாக அமைத்துக்கொண்டு ஆலமரத்தடியிலே ஸ்ரீமந்நாராயண தத்வோபதேசம் செய்தனனென்று நூல்கள் கூறும்; திருமழிசையாழ்வாரும் நான்முகன் திருவந்தாதியிலே-”ஆலநிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு, மேலையுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன்- ஞால மளந்தானை ஆழிக்கிடந்தானை ஆல்மேல், வளர்ந்தானைத் தான் வணங்குமாறு” (17.) என்ற பாசுரத்தினால் இக்கதையை அநுஸந்தித்தமை காண்க.

English Translation

How the poison-throated siva tought Yoga to Daksha, Pulastya. Agastya and Markandeya under the peepul free! They closed the battle-gates of their five senses and realised you as their only path to freedom!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்