விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நாவினால் நவிற்று*  இன்பம் எய்தினேன்*
  மேவினேன்*  அவன் பொன்னடி மெய்ம்மையே*

  தேவு மற்று அறியேன்*  குருகூர் நம்பி*
  பாவின் இன்னிசை*  பாடித் திரிவனே*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நவிற்றி - (ஆழ்வாரை) ஸ்தோத்திரம் பண்ணி
மேவினேன் - ஆச்ரயிக்கப்பெற்றேன்
மெய்ம்மையே  - ஆச்ரயிக்கப்பெற்றேன்;
பாலின் - அருளிச்செயல்களின்
திரிவன் - திரியக்கடவேன்
 

விளக்க உரை

தம்முடைய மநோவாக்காயங்களென்ற மூன்று கரணங்களும் ஆழ்வார் விஷயத்திலேயே ஏகாக்ரமாக ஈடுபட்டபடியை அருளிச் செய்கிறார் இதில். நான் என்னுடைய நாக்கைக்கொண்டு அப்ராப்தமான பகவத் விஷயத்திலே செலுத்தாமல் ப்ராப்தசேஷியான ஆழ்வாரைத் துதிப்பதிலே செலுத்திப் பரமாநந்த மடைந்தேன்; என் தலை படைத்த ப்ரயோஜநம் பெறும்படி தலையை ஆழ்வார் திருவடிகளிலே மடுத்தேன்; இது ஸத்யம்.

English Translation

I spelled his name and found my joy; I served his feet and found the truth. I do not know another god; I sing his songs and roam the street.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்