விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கண்ணி நுண் சிறுத் தாம்பினால்*  கட்டு உண்ணப்
  பண்ணிய பெரு மாயன்*  என் அப்பனில்*

  நண்ணித் தென் குருகூர்*  நம்பி என்றக்கால்
  அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே (2) 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கண்ணி - (உடம்பிலே உறுத்தும்படி பல)முடிகளையுடைத்தாய்;
தாம்பினால் - கயிற்றினால்;
பெருமாயன்பெருமாயன் - விசேஷ ஆச்சரிய சக்தியுக்தனாய்;
அண்ணிக்கும் - பரமபோக்யமாயிருக்கும்;
அமுது ஊறும் - அம்ருதம் ஊறா நிற்கும்;
 

விளக்க உரை

உரை:1

ஆழ்வாருடைய ஒப்பற்ற போக்யதையையும், அந்த போக்யதையின் ரஸமறிந்தவர், தாமொருவரே என்பதையும் இப்பாட்டில் அருளிச் செய்கிறார். நம்மாழ்வர், மற்றுள்ள அவதாரங்களிற் காட்டில் க்ருஷ்ணாவதாரத்திலே, அது தன்னிலும் நவநீத செளர்யம்பண்ணி ஆய்ச்சியர்தாம்பினால் உரலினிடை ஆப்புண்டிருந்த அபதாநத்தில் ‘எத்திறம்! உரலினோடிணைந்திருந் தேங்கிய எளிவே!” என்று ஆறுமாதம் மோஹித்திருந்தவராதலால். அந்த அபதாநத்தை முன்னிட்டுக் கண்ணபிரானைக் கூறுகின்றார்.

உரை:2

முடிகளையுடைத்தாய் நுட்பமாய் கயிற்றினால் யசோதைப்பிராட்டி தன்னைக்கட்டும்படி பண்ணுவித்துக்கொண்ட விசேஷ ஆச்சரிய சக்தியுக்தனாய் எனக்கு ஸ்வாமியான ஸர்வேச்வரனை விட்டு கிட்டி ஆச்ரயித்து தெற்குத் திசையிலுள்ள (ஆழ்வார் திருநகரியென்னும்) குருகூர்க்கு நிர்வாஹகாரன ஆழ்வார் என்று சொன்னால். பரமபோக்யமாயிருக்கும் என் ஒருவனுடைய நாவுக்கே அம்ருதம் ஊறா நிற்கும்.
பன்னிரு ஆழ்வார்களுள் மதுரகவி ஆழ்வார் மட்டும் திருமாலைப் பாடாமல், திருமாலின் அவதாரங்களைப் பாடாமல், திருமாலின் அடியவராகிய நம்மாழ்வாரை மட்டும் பாடிய பெருமைக்குரியவர்.   அதையே தம் கடமையாகக் கருதி வாழ்ந்தவர். நம்மாழ்வாரை இறைவனாகக் கொண்டு பாடியதன் மூலம் இறைவணக்கமும் குருவணக்கமும் ஒரே தரத்தன என்று காட்டுகிறார்"

English Translation

Here on a spinout leash of rope the wonder-child my Lord was held. But more, the mouth is nectar-welled when Kurugur Nambi’s name is spelled.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்