விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    துண்ட வெண்பிறையன்*  துயர் தீர்த்தவன்*  அஞ்சிறைய-
    வண்டுவாழ் பொழில்சூழ்*  அரங்கநகர் மேய அப்பன்*
    அண்டர் அண்ட‌ பகிரண்டத்து*  ஒரு மாநிலம் எழுமால்வரை,*  முற்றும்-
    உண்ட கண்டம் கண்டீர்*  அடியேனை உய்யக் கொண்டதே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

து ண்டம் - ஒரு துண்டாயிருக்கிற (கலாமாத்ரமான);
துயர் -  (பிச்சையெடுத்துத் திரிந்த) பாதகத்தை;
தீர்த்தவன் - போக்கினவனும்;
பொழில் சூழ் - சோலைகள் சூழப்பெற்ற;
மேய - பொருந்தியிராநின்ற;
 

விளக்க உரை

ஆறாம்பாசுரத்திலே கண்டம் என்று சொல்லக்கூடியதிருக்கழுத்துப் பகுதியை அனுபவிக்கிறார். வெண்பிறையன் துயர் தீர்த்த, வண்டுவாழ்சோலைகளால்சூழப்பட்டதிருவரங்கத்திலேஎழுந்தருளி இருக்கும் திருவரங்கனாதனின்கழுத்தானது ஏழு உலகங்களையும்பிரளயகாலத்திலே அடக்கிக் கொண்டது. அந்த கண்டமானதுதனக்கும் உய்வு உபாயமாக இருந்தது என்று மங்களாசாசனம் பண்ணுகிறார் ஆழ்வார்.

English Translation

My Lord saved the crescent-crested Siva from sin. He swallowed, the world, the people, the space, the Earth, the seven mountains and all else. He resides in Arangam city surrounded by flower groves that hum with bees. O, see his neck elevates my spirits!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்