விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சதுரமா மதிள்சூழ்*  இலங்கைக்கு இறைவன் தலைபத்து-
    உதிர ஓட்டி,*  ஓர் வெங்கணை*  உய்த்தவன் ஓத வண்ணன்*
    மதுரமா வண்டு பாட*  மாமயில் ஆடுஅரங்கத்து அம்மான்,*  திருவயிற்று- 
    உதர பந்தம்*  என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மா - உயர்ந்திருக்கிற;
வெம் - கணை கூர்மையான அஸ்த்ரத்தை;
அரங்கத்து - அம்மான் திருவயிற்றில். சாத்தியுள்ள ‘உதரபந்த’ மென்னும் திருவாபரணமானது;
என் உள்ளத்துள் நின்று - என் நெஞ்சினுள் நிலைத்து நின்று
உய்த்தவன் ப்ரயோகித்தவனும்;
 

விளக்க உரை

நான்காம்பாசுரத்திலேஉதரபந்தனத்தைசேவிக்கிறார். நான்கு பக்கத்திலும்மதில்களால்சூழப்பட்டஇலங்கையின்தலைவனானஇராவணனின் பத்து தலைகளையும்அருந்துவிழச் செய்து, போரில் தோற்று ஓடச் செய்தவனும், வண்டுகள் இசைபாட, மயில்கள்ஆடும்படியதான அழகிய சோலையை உடைய அரங்கத்தம்மானாகியஇராமபிரானுடையஉதரபந்தனம்(யசோதையால் கட்டப்பட்ட கயிற்றின் அடையாளம்) என் நெஞ்சில் உலாவுகின்றது.

English Translation

He shot arrows and felled the ten heads of Ravana, the king of fortified Lanka. He is the ocean-hued reclining in Arangam where peacocks dance to the song of bumble-bees. Aho; the cummerbund over his belly remains in my heart and haunts me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்