விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மந்தி பாய்*  வட வேங்கட மாமலை,*   வானவர்கள்,- 
    சந்தி செய்ய நின்றான்*  அரங்கத்து அரவின் அணையான்,* 
    அந்தி போல் நிறத்து ஆடையும்*  அதன்மேல் அயனைப் படைத்ததுஓர் எழில்* 
    உந்தி மேலதுஅன்றோ*  அடியேன் உள்ளத்து இன்னுயிரே (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மந்தி - குரங்குகளானவை;
வடவேங்கடம் மா மலை - வடதிசையிலுள்ள திருவேங்கடமென்னும் திருமலையிலே;
வானவர்கள் - நித்யஸூரிகள்;
அரங்கத்து - கோயிலிலே;
அதன்மேல் - அப்பீதாம்பரத்தின்மேலே;
 

விளக்க உரை

குரங்குகள் தாவும்திருவேங்கடமலைமேல், வானவர்கள் என்று சொல்லப்படும் நித்யசூரிகள்பூக்களைக்கொண்டுஆராதிக்கும்படிநிற்பவனாய், திருவரங்கத்திலே ஆதிசேஷன் எனும்போக்யமானதிருப்படுக்கையைஉடையவனான அழகிய மணவாளனின்செவ்வானம் போன்ற நிறத்தையுடைய பீதாம்பரம் மற்றும் பிரமனைப் படைத்த ஒப்பற்ற அழகுடையதிருநாபிக் கமலம் ஆகியவற்றின் மீது என் ஆத்மாவானதுபடிந்தது என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.

English Translation

He stands in, the monkey forest of Venkatam hills over the North, worshipped by the celestials. He reclines on a serpent in Arangam. Over his sunset-red vesture, the beautiful lotus-seat of Brahma rises from his navel, obsessing my heart and spirit!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்