விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  உவந்த உள்ளத்தனாய்*  உலகம் அளந்து அண்டம் உற,* 
  நிவந்த நீள்முடியன்*  அன்று நேர்ந்த நிசாசரரைக்,*
  கவர்ந்த வெங்கணைக் காகுத்தன்*  கடியார்பொழில் அரங்கத்து அம்மான் அரைச்* 
  சிவந்த ஆடையின் மேல்*  சென்றதுஆம் என சிந்தனையே (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

உவந்த -  உள்ளத்தன் ஆய் மகிழ்ச்சியோடு கூடிய மனத்தையுடையவனாய்க் கொண்டு;
நிவந்த -  உயர்த்தியை அடைந்த;
நேர்ந்த -  எதிர்த்துவந்த;
பொழில் -  சோலைகளையுடைய;
அரை -  திருவரையில் (சாத்திய);
 

விளக்க உரை

சிறப்புப் பொருள்: எம்பெருமான் மீது ருசி கண்டமையைஉணர்த்தும் பாசுரம்: எம்பெருமான் த்ரிவிக்ரம அவதாரம் எடுத்த பொது அடியார் அடியாரல்லாதார் என்ற வேறுபாடு இன்றி எல்லோர்தலையிலும் தம் திருவடியை வைத்து அருளி, மூன்று உலகங்களையும் அளந்து, அண்டங்கள்அளவும் சென்று முட்டும்படியான பெரிய திருமுடியைஉடையவனாய், முன்னொரு காலத்தில் எதிர்த்து வந்த இராக்ஷஷர்களைக்கொன்ற கொடிய அம்புகளை உடைய இராமபிரானாய் மணம் வீசும் சோலைகளையுடையதிருவரங்கத்தில்எழுந்தருளி இருக்கும் எம்பெருமானின் இடுப்பில் சாற்றியதிவ்யபீதாம்பரத்தின் மேல் என்னுடைய நினைவானதுபதிந்தது.

English Translation

English Meaning:- With glee in his heart, he measured the Earth; his crown touched the roof of the Universe. He is the Kakuthstha Lord Rama, who rained arrows and killed the Rakshasas clan: He is the Lord of Arangam surrounded by fragrant groves. My mind hovers over the red vestures on his dark frame!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்