- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
திருமறு மார்வ! நின்னைச்* சிந்தையுள் திகழ வைத்து,*
மருவிய மனத்த ராகில்* மாநிலத் துயிர்க ளெல்லாம்,*
வெருவரக் கொன்று சுட்டிட்* டீட்டிய வினைய ரேலும்,*
அருவினைப் பயன துய்யார்* அரங்கமா நகரு ளானே!
காணொளி
பதவுரை
விளக்க உரை
தாழ்ந்த வகுப்பில் பிறப்பேயன்றி நீசமான அநுஷ்டாநமு முடையரேயாயினும் “மேம் பொருள் போகவிட்டு” என்ற பாட்டிற்கூறிய அதிகாரத்திலே நிஷ்டையுடையராகில் அவர்களுக்கு அந்தக் கருமங்களின் பலன் அநுபவிக்கக் கடவதல்ல என்கிறது, இப்பாட்டு. திருமகள் கொழுநனான எம்பெருமானே! என்னை இடைவிடாது நெஞ்சிலே அநுஸந்தித் திருப்பராகில் அந்த ப்ரபாவத்தாலே அவர்களுடைய பரஹிம்ஸை முதலிய கொடியபாவங்களும் தீயிலிட்ட தூசுபோல் உருமாய்ந்தொழியு மாதலால் அவர்கள் நரகங்களிலே புக்கு அக்கருமங்களின் பலன்களான தண்டனைகளை அநுபவிக்கவேண்டிய ப்ரஸக்தியே யில்லை என்றவாறு.
English Translation
O Lord with Srivatsa on your chest! Those who keep you in their thoughts, with their hearts drawn to you, - even if they earn the infamy of killing all creatures and destroying the world with fire, - they will not bear the burden of their acts, such is your grace. O Lord of Tiru-Arangam!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்