- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
வானுளா ரறிய லாகா* வானவா! என்ப ராகில்,*
தேனுலாந் துளப மாலைச்* சென்னியாய்! என்ப ராகில்,*
ஊனமா யினகள் செய்யும்* ஊனகா ரகர்க ளேலும்,*
போனகம் செய்த சேடம்* தருவரேல் புனித மன்றே?
காணொளி
பதவுரை
விளக்க உரை
தேவர்கள் மேலுலகில் இருப்பவர்கள் என்ற மாத்திரத்தால் அவர்களுக்கு எம்பெருமானுடைய ஸ்வரூபம்ரூபம் முதலியவை விசதமாய்விடுமென்ன முடியாது. “நாம் மநுஷ்யர்களிற்காட்டிலும் மிகவும் மேம்பாடுடையோம்; மேலுலகத்தில் வாழ்கிறோம். கடவர்களாயிருக்கிறோம்” என்றாற்போலே அவர்கள் தங்களைப் பெருக்க மதித்திருப்பதால், “அகிஞ்சநோநந்யகதி:” என்றிருக்கும் ஸாத்விகாதிகாரிகளால் அறியப்படுமவனான எம்பெருமானை அவ்வஹங்காரிகள் அறியகில்லார் என்க. இப்படி எம்பெருமானுக்குள்ள ‘அறிவதரியான்’ என்கின்ற ஸ்வரூபத்தை உள்ளபடி அறிவரேல், அவர்கள் தாங்கள் இழிதொழில் செய்யுமவர்களாயிருந்தாலும், தாங்கள் செய்வது போதாமல் பிறரையும் அவ்வழிதொழில்களைச் செய்விப்பவர்களாயிருந்தாலும் அவர்கள் தாங்கள் பெற்றிருக்கும் பகவத் ஸ்வரூபவுணர்ச்சி காரணமாக மிகவும் ஆதரிக்கப்படுவர்களே யன்றி இழிதொழில் செய்யுமவர்களென்று இகழப்படமாட்டார்கள். அவ்வளவேயுமன்று; அவர்கள் தாங்கள முதுசெய்து மிகுந்த ப்ரஸாதத்தை அருள் புரிந்தால் அதனைப் பெற்று மற்றையோர் தூய்மைபெறலாம்படி அத்தனை பெருமை பொருந்தியவர்கள்காண் என்கிறது.
English Translation
What though they are terrible ones, engaging others in terrible acts, if they only call “O Lord-whom-even gods-can’t comprehend!” and “O Lord-with-bee-humming-Tulasi-garland-wreath!”, if they give the leftovers of what they eat, that becomes sanctified food for me.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்