விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  குடதிசை முடியை வைத்துக்*  குணதிசை பாதம் நீட்டி,* 
  வடதிசை பின்பு காட்டித்*  தென்திசை இலங்கை நோக்கி,*
  கடல்நிறக் கடவுள் எந்தை*  அரவணைத் துயிலுமா கண்டு,* 
  உடல்எனக்கு உருகுமாலோ*  என்செய்கேன் உலகத்தீரே! (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

உலகத்தீர - உலகத்திலுள்ளவர்களே;
கடல் நிறம் கடவுள் - கடல் போன்ற கருநிறத்தையுடைய கடவுளான;
எந்தை - எம்பெருமான்;
குடதிசை - மேற்குதிக்கில்;
முடியை வைத்து - திருமுடியை வைத்தருளியும்;

விளக்க உரை

கண் முதலிய அவயவங்களுக்கு உண்டாகிற விகாரமேயல்லாமல் அவற்றுக்கு ஆஸ்ரய மாய் அவயவியான ஸரீரமும் கட்டழியாநின்றதே! இதற்கு என் செய்வேன்! என்கிறார். அழகிய மணவாளன் நான்கு திக்குக்களுக்கும் தன் ஸம்பந்தமுண்டாம்படி ஸேஷஸயநனாய் யோக நித்திரை செய்தருள்வதை ஸேவித்துத் தமது ஸரீரம் நீராய்க் கரைந்து உருகிச் செயலற்றிருத்தலை உலகத்தார்க்கு வியப்போடு அறிவிக்கின்றனரென்க. பூமியின் ஸ்ருஷ்டி - மநுஷ்யதிர்யக்ஸ் தாவரங்களான பொருள்கள் வாழ்தற்காக என்றும் ஆகாஸத்தின் ஸ்ருஷ்டி – தேவர்கள் வாழ்தற்காக என்றும் ஏற்பட்டிருக்கிறது; திக்குக்களின் ஸ்ருஷ்டி வ்யர்த்தம் என்று நினைக்கவேண்டா; சேதநர்க்கு தன்மீது அன்பைக் யுண்டாக்குமாறு எம்பெருமான் தான் பள்ளி கொள்வதற்காகவே திக்குக்களை ஸ்ருஷ்டித்ததும் என்று இப்பாட்டால் கூறுவதாக விஸேஷார்த்த முரைப்பார்.

English Translation

The Lord of ocean hue, my master, reclines on a serpent in Arangam, with his crown resting in the East, his feet stretched to the West, his back to the North, his eyes looking South towards Lanka. O People of the world! What can I do? Alas, my body melts to see him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்