விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பாயும் நீர் அரங்கந்தன்னுள்*  பாம்பணைப் பள்ளி கொண்ட,* 
    மாயனார் திருநன் மார்வும்*  மரகத உருவும் தோளும்,*
    தூய தாமரைக் கண்களும்*  துவரிதழ் பவள வாயும்,* 
    ஆயசீர் முடியும் தேசும்*  அடியரோர்க்கு அகலல்ஆமே?  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பாயும் நீர் - பாயாநின்றுள்ள காவிரி சூழ்ந்த;
அரங்கம் தன்னுள் - கோயிலிலே;
பாம்பு அணை - சேஷசயநத்திலே;
பள்ளிகொண்ட - கண்வளர்ந்தருளாநின்ற ;
மரகதம் உருவும் - மரகத மணி போன்ற திருமேனி நிறமும்;

விளக்க உரை

கீழ் “பனியரும்பு உதிருமாலோ என் செய்கேன் பாவியேனே” என்றும், “உடலெனக் குருகுமாலோ என் செய்கேனுலகத்தீரே” என்றும் கதறின ஆழ்வாரை நோக்கிச் சில ஸம்ஸாரிகள் “ஓய்! பகவத் விஷயத்திலே அகப்பட்டு ஏன் இங்ஙன கதறுகிறீர்? அதில் ஊற்றத்தை விட்டு எங்களோடே கூடினீராகில் என் செய்கேன்! என் செய்வேன்!! என்று வாய்வெருவ வேண்டாதபடி தரித்து ஸுகமே வாழலாமே! உம்முடைய ஸ்வயம்க்குருதாநத்தம் மிகவ மழகிறது! என்றாற்போலே சில சொல்ல; அது கேட்ட ஆழ்வார், ‘ பாவிகாள்! கண்வளர்ந் தருளுகிற அழகைக்கண்டுவைத்து இவ்வழகெல்லாம் நமக்காகவாயிற்று? என்று களிக்கும் படியான ஸ்வரூபஜ்ஞாநமுடைய:எங்களுக்கு, “அஹம்-மம” என்றிருக்கிற உங்களைப்போல் அகலமடியுமோ? என்கிறார். எம்பெருமானுடைய அதிஸயங்களை வெறும் ஏட்டுபுறத்தில் கேட்டுப் போகையன்றிக்கே பரமபாவநமான திருவரங்கந் திருப்பதியிலே திருவனந்தாழ்வான்மீது “தன் தாளுந் தோளும் முடிவுகளும் சமனிலாத பல பரப்பி” என்றபடி ஸகலாவயவஸெளந்தரியமும் நன்கு விளங்கும்படி சாய்தருள்கின்ற எம்பெருமானது திவ்ய தேஜஸ்ஸைக் காணப்பெற்றவர்களும் மீண்டு கால்பேர்ந்து விலகமடியுமோ? என்க.

English Translation

In the flowing waters of Arangam, the Cowherd-Lord reclines on a snake. Can devotees afford to lose sight of his auspicious Sri-chest, his emerald frame and arms, his pure lotus eyes, his red petal-like lips, his radiance and his ancient crown?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்