விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வாள்கள்ஆகி நாள்கள் செல்ல*  நோய்மைகுன்றி மூப்புஎய்தி,* 
  மாளும்நாள் அதுஆதலால்*  வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே,*
  ஆளதுஆகும் நன்மைஎன்று*  நன்குணர்ந்துஅது அன்றியும்,* 
  மீள்வுஇலாத போகம்*  நல்க வேண்டும் மால பாதமே.    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வாள்கள் ஆகி செல்ல - (நமது ஆயுளை அறுக்கும்) வாள்கள்போன்று கழிய
நோய்மை - பலவகை வியாதிகளாலே
குன்றி - உடல் பலக்குறைபட்டு
மூப்பு எய்தி - கிழத்தனமும் வந்து சேர்ந்து
மாளும் நாள் அது - மரணமடைவதோர் நாள் நெருங்கிவிட்டது;

விளக்க உரை

“மின்னின்னிலையில மன்னுயிராக்கைகள்”என்றபடி நமது வாழ்நாள் இன்ன போது முடியுமென்று தெரியாததாகையால் வாழ்நாளுள்ள வரையில் எம்பெருமானை வணங்கி வாழ்த்தவேணுமென்று தமது திருவுள்ளத்தைக் குறித்து உபதேசிக்கிறார். நாள்களோ கடுங்குதிரைபோல் விரைந்தோடிக்கொண்டேயிருக்கின்றன; ‘ஆயுஸ்ஸை அறுக்கிற வாள்களோ இவை என்னும்படியாக நாள்கள் பழுதே கழியாநிற்க, யௌவநப் பருவத்திலுண்டாகக் கூடிய ரோகங்களாலே உடல் குன்றிப்போய் இடிவிழுந்தாற்போல் திடீரென்று கிழத்தனமும் வந்து சேர்ந்து செத்துப்போகும் நாள் அணுகிவிட்டது; ஆயுஸ்ஸு அஸ்திரமாகையாலும், உள்ள ஆயுஸ்ஸில் விக்கங்கள் பலவு முண்டாகையாலும், ‘நாளைக்குத் தொழுவோம்’ என்றிராமல் இப்போதே திருவடிகளிலே வணங்கி வாழ்த்தப்பாராய் நெஞ்சே!; ஆனது நன்மையாகும் என்று நன்கு உணர்ந்து வணங்கி வாழ்த்து என்று அந்வயம். போதைப் போக்குவதற்காகவன்றியே ‘அடிமைசெய்வதுதான். புருஷார்த்தம் என்கிற அந்யவரையத்துடனே வணங்கி வாழ்த்து’ என்கிறார்.

English Translation

Our days are passing like a saw with illness and infirmity. The day of death is hanging low, so offer praise and bow, O Heart! Know the only good there is, is service to the holy feet. The Lord will grant the permanent -- a life on Earth without return.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்