விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சுரும்புஅரங்கு தண்துழாய்*  துதைந்துஅலர்ந்த பாதமே,* 
  விரும்பி நின்று இறைஞ்சுவேற்கு*  இரங்கு அரங்க வாணனே,*
  கரும்புஇருந்த கட்டியே!*  கடல்கிடந்த கண்ணனே,* 
  இரும்புஅரங்க வெஞ்சரம் துரந்த*  வில் இராமனே!  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அரங்க - அழியும்படி
வெம்சரம் - தீக்ஷ்ணமான அம்புகளை
துரந்த - பிரயோகித்த
வில் - ஸ்ரீசார்ங்கவில்லையுடையவனே!
இராமனே - இராமபிரானே!

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “அஞ்சலென்னவேண்டுமே” என்று அபயப்ரதாநமாத்ரத்தை வேண்டினாயினும் அவ்வளவினால் த்ருப்திபெறக் கூடியவரல்லரே; பெரியபெருமாள் திருவடிகளிலே நித்யாநுபவம் அபேக்ஷிதமாயிருக்குமே; அவ்வநுபவம் வாய்க்குமாறு கிருபை செய்தருளவேணுமென்கிறார் இதில். “நான்காமடியில், இரும்பு போல் வலியநெஞ்சினரான அரக்காக என்ன வேண்டு மிடத்து இரும்பு என்று அபேதமாகச் சொன்னது ரூபகாதிரயோக்தியாம். அரங்குதல்- (இங்கு) அழிதல்.

English Translation

O Lord with lovely lotus-feet and fragrant nectar-Tulasi wreath, O Sweetness of the cane-sugar, dear-to-eyes in ocean-deep! O The mighty bow-wielder who fired a rain of speeding darts! O Lord of Rangam-oor, I pray you heed the call of devotees.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்