விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    விடைக் குலங்கள் ஏழ்அடர்த்து*  வென்றிவேற்கண் மாதரார்,* 
    கடிக்கலந்த தோள்புணர்ந்த*  காலி ஆய! வேலைநீர்,*
    படைத்து அடைத்து அதில் கிடந்து*  முன்கடைந்த நின்தனக்கு,* 
    அடைக்கலம் புகுந்த என்னை*  அஞ்சல் என்ன வேண்டுமே.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வேலை நீர் - ஜலதத்துவமாகிய கடலை
படைத்து - (முதல்முதலாக) ஸ்ருஷ்டித்தும்
அடைத்து - (ஸ்ரீராமாவதாரத்திலே அக்கடலில்) அணைகட்டியும்;
அதில் கிடந்து - (தங்கள் தங்கள் ஆபத்தை முறையிட்டுக் கொள்வார்க்கு முகங்கொடுக்க) அக்கடலில் பள்ளிகொண்டளியும்
முன் - முன்னொருகாலத்திலே

விளக்க உரை

ஸ்ரீவிபீஷணாழ்வானுக்கு அபயப்ரதாநம் செய்தருளினாற் போலவும் அர்ஜுநனை நோக்கி “மாசுச:” என்றாற்போலவும் அடியேனைநோக்கி அஞ்சேல் என்றருளிச் செய்யவேணும் பிரானே! என்கிறார். “முன்கடைந்த நின்றனக்கு” என்றும் பாடமுண்டு. அஞ்சல்- எதிர்மறை வினைமுற்று.

English Translation

O Cowherd-Lord, you fought the bulls in contest for the Pinnai-dame, you came along with victory and took the lady in your brace. O Lord you made and churned the ocean, slept on it and made a bridge! I seek refuge in you alone, assure me safety, say “No fear”.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்