விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வண்டுலாவு கோதைமாதர்*  காரணத்தினால் வெகுண்டு* 
  இண்டவாணன் ஈரைஞ்_று*  தோள்களைத் துணித்தநாள்,* 
  முண்டன் நீறன் மக்கள்வெப்பு*  மோடி அங்கி ஓடிடக்,- 
  கண்டு,*  நாணி வாணனுக்கி இரங்கினான்*  எம் மாயனே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வெகுண்டு - கோபங்கொண்டு
இண்ட - செறித்துவந்த
வாணன் - பாணாகரனுடைய
ஈர் ஐ நூறு தோள்களை - ஆயிரந்தோள்களை
துணித்தநாள் - கழித்தபோது

விளக்க உரை

ருத்ரனானவன் பாணனை ரக்ஷிப்பதாகப் பிரதிஜ்ஜை பண்ணிவைத்து, பரிகாரங்களோடு கூட ரக்ஷிக்க முயற்சியுஞ்செய்து ரக்ஷிக்க முடியாமல் எதிரிகையிலே அவனைக் காட்டிக் கொடுத்துத் தப்பிப்போனபடியாலும், கண்ணபிரான் க்ருபை பண்ணி அவனடைய ஸத்தையை நோக்கினபடியாலும் அந்தச்சிவன் ரக்ஷகனல்லவென்றும் கண்ணபிரானே ரக்ஷகனென்னும் ப்ரத்யக்ஷஸித்தமாயிற்றென்கிறார். தன்னுடைய பெண்ணான உஷையானவள் தன் ஆசை தீர அதிருந்தாழ்வானோடு கலவி செய்திருக்கச்செய்தே அதனையுணர்ந்து ஸந்தோஷியாமல் கோபங்கொண்டவனாய் யுத்தத்திலே வந்து மேல்விழுந்த வாணனுடைய ஆயிரத்தோள்களை யறுத்தவக்காலத்தில், மொட்டைத் தலையனும் சம்பலாண்டியுமான சங்கரனும் அவனது புதல்வரான ஷண்முகாதிகளும், ஜ்வரதேவதை, பிடாரி, நாற்பத்தொன்பது அக்நிகளுக்குக் கூடஸ்தனான அக்நி இவர்களும் தங்கள் தங்கள் பிராணனைக் காப்பாற்றிக்கொண்டால் போதுமென்றெண்ணி முதுகுகாட்டி ஓடிப்போக, உயிரிழக்கவேண்டியவனான வாணன் மீது பரமகிருபையைச் செய்தருளி நான்கு தோள்களையும் உயிரையும் கொடுத்தருளினான் எம்பெருமான்; ஆனபின்பு இவன் ரக்ஷகனோ! மற்றையோர் ரக்ஷகரோ? ஆராய்ந்து காண்மின் என்றவாறு.

English Translation

For the sake of bee-hovering – garland – daughter’s safety keep, the angry Bana came to war with thousand arms that hid from scene. The mat-hair ash-ridden Siva the children and his wife, and Fire, they all escaped the discus’ wrath of cowherd-Lord who showed mercy.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்