விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  குந்தமோடு சூலம்வேல்கள்*  தோமரங்கள் தண்டுவாள்,* 
  பந்தமான தேவர்கள்*  பரந்து வானகம் உற,*
  வந்தவாணம் ஈரைஞ்நூறு*  தோள்களைத் துணித்தநாள்,* 
  அந்தவந்த ஆகுலம*  அமரரே அறிவரே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பந்தம் ஆன தேவர்கள் - கூட்டங் கூட்டமாயிருந்த ருத்ராதிதேவதைகள்
பரந்து - (பல திக்குகளிலும்) சிதறிப் போய்
வானகம் உற - தங்கள் தங்களிருப்பிடமான மேலுலகங்களிற் சென்றுசேர
வந்த வாணன் - (பிறகு தோள்களை வீசிக்கொண்டு) எதிர்த்து வந்த பாணாஸுரனுடைய
ஈர் ஐநூறு தோள்களை - ஆயிரந்தோள்களை

விளக்க உரை

“வரந்தரமிடுக்கிலாததேவர்” என்று கீழ்ப்பாட்டிற் கூறியதைக்கேட்ட சிலர், ‘இப்படிச் சொல்லலாமோ? அவர்களுக்கு சக்தி இல்லையோ? அவர்களை ஆச்ரயித்து இஷ்ட ஸிக்தி பெற்றவர்கள் பலபேர்களில்லையோ?” என்ன; ருத்ரனை யாச்ரயித்து அவனுக்கு தந்தரங்கனாயிருந்த பாணாஸுரன் பட்டபாடும், அந்த ருத்ரன் தானும் கண்கலங்கினபடியும் அப்போது உடன்பட்ட தேவர்கட்கே தெரியுமத்தனையென்கிறார். பந்தமான தேவர்கள் = பந்தமாவது ஸம்பந்தம்; ருத்ரனோடு ஸம்பந்தமுடையவர்களான ஷûப்ரஹ்மண்யன் முதலான தேவதைகள் என்றபடி வாணனுக்கு உறவான ருத்ராதிகள் என்றுமாம். இங்ஙனன்றிக்கே, “குந்தமோடு சூலம் வேற்கள் தோடரங்கள் தண்டுவாள் பந்தமான” என்று சேர்த்து அந்வயிக்கவுமாம்; குந்தம் முதலான ஆயுதங்கள் காற்கட்டாகப் பெற்ற தேவர்கள் என்றதாகிறது. ரக்ஷகமாக வேண்டிய ஆயுதங்கள் காற்கட்டானபடி; இராவணனுக்குப்போல.

English Translation

The godlings wielding lancet, axe, trident, spear and dagger, club, ran away from battle scene and sought refuge in sky above. The thousand-handed Bana had to lose his arms and shoulders then. The havoc that the discus played, -- the gods above were witness to!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்