விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஆடகத்த பூண்முலை*  யசோதை ஆய்ச்சி பிள்ளையாய்* 
  சாடுஉதைத்து ஓர் புள்ளதுஆவி*  கள்ளதாய பேய்மகள்*
  வீடவைத்த வெய்யகொங்கை*  ஐயபால் அமுதுசெய்து,* 
  ஆடகக்கை மாதர் வாய்*  அமுதம் உண்டது என்கொலோ? 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வீட - நீ உயிர்விட்டு மாளும்படி
வைத்த - உன் திருப்வளத்திலே வைத்த
வெய்ய  கொங்கை - (விஷம் தீற்றின) கொடிய முலையிலுள்ள
ஐய பால் - ஸூக்ஷ்மமான பாலை
அமுதுசெய்து - உறிஞ்சியுண்டு

விளக்க உரை

ஆடக்கை மாதர்வா யமுதமுண்டது என்கொல்? = “உன்னையும் ஒக்கலையிற் கொண்டு தமில்மருவி உன்னோடுதங்கள் கருத்தாயின செய்துவருங் கன்னியரும் மகிழ” என்றபடி திருவாய்ப்பாடியிலுள்ள கன்னிகைகள் இவனை யிடுப்பில் எடுத்துக்கொண்டு தங்கள் தங்கள் மனைகளிலே கொண்டுபோக, யௌவந தசையைப் பரிக்ரஹிந்து வித்தகனாய்க்கலந்து அவர்களது வாயமுகத்தை உண்பன்; அதனைச் சொல்லுகிறார். ஆடகக்கை மாதர் என்றது- பொன்வளைகளாலே அலங்கரிக்கப்பட்ட கையையுடைய பெண்கள் என்றபடி. (ஆடகம் என்ற காரணச்சொல் காரியத்திற்கு இலக்கணையால் வாசகமாயிற்று.) கண்ணபிரான் பிடிக்கும் கையென்றும், கண்ணபிரான் அணைக்குங் கையென்றும் அலங்கரிப்பவர்களாம். வாயமுதமுண்டது என்கொல்! = பூதபக்கல் உண்ட விஷத்திற்கு இவ்வமுதம் பரிஹாரமோ? என்றவாறு.

English Translation

You became the child of golden-breasted cowherd-lady, O! You broke a cart and caught the flighty ogress Putana the foe; you set your lips on both her breasts and sucked her life. O Wonder-Lord you took a kiss, a sweetheart of the bangled dames.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்