விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நாகம்ஏந்து மேருவெற்பை*  நாகம்ஏந்து மண்ணினை,* 
  நாகம்ஏந்தும் ஆகமாகம்*  மாகம்ஏந்து வார்புனல்,*
  மாகம்ஏந்து மங்குல் தீஓர்*  வாயுமைந்தும் ஐந்துகாத்து,* 
  ஏகம்ஏந்தி நின்றநீர்மை,*  நின்கணே இயன்றதே,*    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நாகம் - ஸவர்க்கலோகத்தை
ஏந்து - தரிக்கிற
மேரு வெற்பை - மேரு பர்வதத்தையும்
நாகம் - திருவனந்தாழ்வான் (அல்லது) திக்கஜங்களாலே
ஏந்து - தரிக்கப்பட்ட

விளக்க உரை

கைலவஸ்துக்களுக்கும் எம்பெருமான் அந்தர்யாமியாயிருந்து கொண்டு அனைத்துக்கும் ஆதாராமகிறான் என்னுமர்த்தம் கீழ்பாட்டிற் சொல்லப்பட்டது; உலகத்தில் ஒன்றுக்கொன்று தாரகங்களாகத் தோற்றும் பதார்த்தங்கட்கும் இம்வெம்பெருமானே தாரகன் என்கிறது இப்பாட்டு. இரண்டாமடியிலுள்ள “நாகமேந்துமாக!” என்பது ஸம்போதகம். அரவணைமேற் பள்ளிகொண்ட பெருமானை! என்று விளித்தபடி. மேருபர்வதம் ஸ்வர்க்கத்தை எங்ஙனே தரிக்கிறதென்றால், தன் சிகரத்திலுள்ள தேஜ்ஸ்ஸின் வழியாலே என்பர். முதலடியின் முதலிலுள்ள நாகம்- நாசா” என்ற வடசொல்லிகாரம். ***- ***- என்பது ச்ருதி. அதற்கு மேல் நாகம்- நாஹா என்ற வடசொல் விகாரம். அந்த பதத்திற்கு ஸர்ப்பமென்றும், யானையென்றும் இரண்டு பொருள்களுண்டு . இரண்டு பொருளும் இங்கு ஏற்கும். பூமியானது ஆதிசேஷனாலும், திக்கஜங்களாலும் தாங்கப்படுவதால். இரண்டாவடியிலுள்ள நாகமும் - நாஹா என்ற வடசொல் விகரம் (“நாகமேந்துமாகன்” என்பதன் அண்மைவிளி.) இரண்டாமடியில், மாகம் இரண்டும் ஹோவா என்ற வடசொல் விகாரம். முதல் மாகம்- பரமாகாசவாசகம். இரண்டாவது மாகம்- ப்ரஸித்தாகாசவாசகம். மூன்றாமடியிலுள்ள மாகமும்- ஹோவா. என்ற வடசொல் விகாரமே. ஏகமேந்தி நின்ற நீர்மை- என்றிவைமுலான வேதாந்த வாக்கியங்களில் ஓதப்பட்டுள்ள அர்த்தம் உன் பக்கலில்தான் பொருந்தியிரா நின்றதென்றபடி. ஏகம்- வன்கம். நின் கண்= கண்- எழலுருபு.

English Translation

The mountain Meru on the serpent and the earth on elephant-heads, -my Lord on serpent couch, Aho! --the waters from the sky so high! The clouds above the world and fire, the winds that animate all life! You alone support them all and you alone can do this feat!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்