விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஒன்றுஇரண்டு மூர்த்தியாய்*  உறக்கமோடு உணர்ச்சியாய்,* 
    ஒன்றுஇரண்டு காலம்ஆகி*  வேலைஞாலம் ஆயினாய்,*
    ஒன்றுஇரண்டு தீயும்ஆகி*  ஆயன்ஆய மாயனே* 
    ஒன்றுஇரண்டு கண்ணினானும்*  உன்னைஏத்த வல்லனே?* 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆயன் ஆய - கோபாலஸஜாதீயனாய் அவதரித்த
மாயனே! - ஆச்சர்யபூதனான எம்பெருமானே!
ஒன்று இரண்டு கண்ணினாலும் - முக்கண்ணனான சிவபிரானும்
வேலை ஞாம் ஆயினாய் - கடல்சூழ்ந்த பூமண்டலத்துக்கு ப்ரவத்தகனாய்
ஏந்த வல்லனே - துதிக்க வல்லவனே!

 

விளக்க உரை

ப்ரஹ்ருத்ராதிகளைச் சரீரமாகக்கொண்டு அவர்களுக்கு நியாமகனாய் என்கிறது முதலடைமொழி. “முனிபெ நான்முகனே முக்கண்ணப்பா” இத்யாதிகளிற்போல இங்கும் ஸாமாநாதிகரண்யம் சரீர சரீர பாவத்தைப் பற்றியதாம். உறக்கமோடு உணர்ச்சியாய்= இலக்கணையால் அஜ்ஞானத்தை உறக்கமென்கிறது. ஞானமற்றவனுக்கு உறக்கம் தவிர வேறு தொழிலிலாமை அறியத்தக்கது. அஜ்ஞாகம், அந்யதாஜ்ஞாநம், விபரீதஜ்ஞாகம், ஸம்சயம், மறப்பு இவையெல்லாம் உறக்கமேயாம். உறக்கத்துக்கும் உணர்ச்சிக்கும் எம் பெருமான் நிர்வாஹகனாகையாவ தென்னென்னில்; தன் ஸ்வரூப யாதாத்மியத்தைச் சிலர்க்கு உள்ளபடி ஸக்ஷாத்கரிக்கச் செய்பவனும் தானே; த்ரிமூர்த்திஸாம்ய வ்யாமேஹாதிகளாலே சிலரை மயங்குபவனும்தானே என்கை. ஒன்றிரண்டு காலமாகி = இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று மூன்று காலங்களுக்கும் நிர்வாஹகன் என்பது ஸாமாந்யமான அர்த்தம். ஸத்வகுணம் மிகும்படியான ஸாத்விககாலத்துக்கும், ரஜோகுணம் மிகும்படியான ராஜஸ காலத்துக்கும், தமோகுணம் மிகும்படியான தாமஸகாலத்துக்கும் கடவன் என்கை விசேஷார்த்தம். ஒன்றிரண்டு தீ = ஆஹவநீயம், கார்ஹத்யம், தஹிணாக்கி என்பவை. ஏத்தவல்லனே என்றது- ஏத்தவல்லவனல்லன் என்றபடி. (எ)

English Translation

You became the One and Two, then you became the sleep and sense. O You became the past, present and future in the Ocean-Earth. You became the three fires and took a birth in Gokulam. Words of praise do fail for even Lord Siva who has three eyes.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்