விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கொல் அணை வேல் வரி நெடுங் கண்*  கௌசலைதன் குல மதலாய் குனி வில் ஏந்தும்* 
  மல் அணைந்த வரைத் தோளா*  வல் வினையேன் மனம் உருக்கும் வகையே கற்றாய்* 
  மெல் அணைமேல் முன் துயின்றாய் இன்று இனிப்போய்*  வியன் கான மரத்தின் நீழற்*
  கல் அணைமேல் கண் துயிலக் கற்றனையோ*  காகுத்தா கரிய கோவே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கொல் அணை - கொலைத்தொழில் பொருந்தின;
வேல் - வேலாயுதம் போன்ற;
வரி நெடுங்கண் - செவ்வரி பரந்த நீண்ட கண்களையுடைய;
கௌசலை தன் - கௌஸல்யையினது;
குலம் - குலத்தில் தோன்றிய;

விளக்க உரை

இன்றளவும் ராஜார்ஹமான ஸுகுமாரஸுயங்களிலே ஸுகமே கிடந்து கண் வளர்ந்த உனக்கு இனி கொடுங்கதிரோன் துன்னு வெயில் வறுத்த வெம்பரல்மேல் படுக்க நேர்ந்ததே! இஃதென்ன கொடுமை! என்று வயிறெரிகிறபடி. வல்வினையேன் என்றது குடையுஞ்செருப்புங் கொடாதே தாமோதரனை நான், உடையுங்கடியனவூன்று வெம்பரற்களுடைக்கடிய வெங்கானிடைக் காலடிநோவக் கன்றின்பின் கொடியே னென்பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே என்றாற்போல் பெருமானுடைய திருமேனி ஸௌகுமார்யத்தை நோக்காமல் வெவ்வியகாட்டில் அவனைப் போகவிட்ட கொடுமையையுடைய தன்னைத்தானே வெறுத்துக்கூறியது. மனமுருக்கும் என்றவிடத்து மனம் முருக்கும் என்றும் பதம்பிரிக்கலாம். முருக்குதல் - அழித்தல். முருங்கு என்பதன் பிறவினை. வியன் - உரிச்சொல். வியல் என்பதன் விகாரமுமாம். நீழல் - நிழல் என்பன் நீட்டல்

English Translation

O Lord, tutelary deity to Kousalya with spear-sharp eyes! O Strong-armed bow-wielder. O Dark-hued Lord, scion of the Kakuthstha clan! You know to melt this sinner’s heart! You who always slept on a soft bed must now be learning to sleep on a bed of rocks under the shade of a deep forest tree, Alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்