விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வா போகு வா இன்னம் வந்து*  ஒருகாற் கண்டுபோ மலராள் கூந்தல்* 
  வேய்போலும் எழில்-தோளி தன்பொருட்டா*  விடையோன்தன் வில்லைச் செற்றாய்*
  மா போகு நெடுங் கானம்*  வல்வினையேன் மனம் உருக்கும் மகனே*  இன்று- 
  நீ போக என் நெஞ்சம்*  இரு பிளவாய்ப் போகாதே நிற்குமாறே  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வா - (சற்று இங்கே) வா;
போகு - இனிச்செல்வாய்;
வா - மறுபடியும் இங்குவா;
இன்னம் வந்து ஒருகால் கண்டு போ - (போம்போது) பின்னையும் ஒரு தரம் வந்து என்னைப் பார்த்துவிட்டுப்போ;
மலர் ஆள் கூந்தல் - பூக்களை எப்பொழுதும் தரிக்கிற மயிர்முடியை யுடையவளும்;

விளக்க உரை

தசரதன் ஸ்ரீராமனை க்ஷணகாலம் காணாவிட்டால் உடனே காண்கைக்காக ஸுமந்த்ரனையிட்டு வரும்படி அழைப்பிப்பன்; பின்பு அவ்விராமனது பின்னழகையும் நடையழகையும் காண்கைக்காக போ என்பன்; பின்னையும் கண்மறையப் போனவாறே ஆற்றாமையால் வா என்பன்; மீண்டும் வந்தவாறே இன்னம் போம்போது ஒருகால் கண்டுபோ என்பன். இப்படி மகனிடத்து அன்பினாலும் அவனது பிரிவை ஆற்றமாட்டாமை யாலாகிய மனச்சுழற்சியாலும் பலமுறை வா என்றும் போ என்றும் மாறிமாறிச் சொல்லி வந்தனனென்க. (மாபோகு) மா என்ற விலங்கின் பொதுப்பெயர், சிறப்பாய் இங்கு யானையைக் குறித்தது. வா போகு வா வின்னம் வந்தொருகால் கண்டுபோ என்பது தசரதன் அறிவுகெட்டுப் புலம்புகிற சமயத்தில் வார்த்தையாதலால் அநந்விதமாய் நிற்கின்ற தென்ப.

English Translation

O My Son! Come, come and go, come once more to me and go, my heart melts for you. You broke the great Siva’s bow, and won the hand of slender-armed flower-coiffured Sita. Today you enter the forest where wild elephants roam; would you break my heart as well?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்