விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  எம் பரத்தர்*  அல்லாரொடும் கூடலன்*
  உம்பர் வாழ்வை*  ஒன்றாகக் கருதலன்*
  தம்பிரான் அமரர்க்கு*  அரங்க நகர்*
  எம்பிரானுக்கு*  எழுமையும் பித்தனே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

எம் பரத்தர் அல்லா ரொடும் - என்னைப்போலே அநந்ய ப்ரயோஜநரா யிராதவர்களோடு;
கூடலன் - (நான்) கூடமாட்டேன்;
உம்பர் வாழ்வை - தேவதைகளின் ஸ்வர்க்கம் முதலிய போகங்களையும்;
ஒன்று ஆக - ஒரு புருஷார்த்தமாக;
கருதலன் - எண்ணமாட்டேன்;
 

விளக்க உரை

ஸம்ஸாரத்தில் வெறுப்பும் கைங்கரியத்தில் விருப்பும் இல்லையாகில் ப்ரஹ்மாதிகளின் ஸம்பத்தேயாகிலும் அதை நான் க்ருணமாகவே நினைப்பேன்; நித்யஸூரிகளெல்லாம் அநுபவிக்குமாபோலே ஸம்ஸாரிகளும் இழவாமல் அநுபவிக்கும்படி கோயிலிலே வந்து ஸூலபராகக் கண்வளர்ந்தருளுமவருடைய இந்த நீர்மையை நினைத்து ‘இது எத்திறம்!’ என்று மோஹிப்பதே எனக்குத் தொழிலாயிருக்கு மென்கிறார்.

English Translation

I neither mix with non devotees nor consider living like Lords a virtue. My Lord of Arangam, --my master for seven lives, --is the Lord of gods. I only crave for him.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்