விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மாலை உற்ற கடற் கிடந்தவன்*  வண்டு கிண்டு நறுந்துழாய்*
  மாலை உற்ற வரைப் பெருந் திரு மார்வனை*  மலர்க் கண்ணனை*
  மாலை உற்று எழுந்து ஆடிப்பாடித்*  திரிந்து அரங்கன் எம்மானுக்கே*
  மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு*  மாலை உற்றது என் நெஞ்சமே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அரங்கன் எம்மானுக்கே - எமக்கு ஸ்வாமியான ஸ்ரீரங்கநாதன் விஷயத்திலே;
மாலை உற்றிடும் - பித்தேறித் திரிகின்ற;
தொண்டர் - ஸ்ரீவைஷ்ணவர்களுடைய;
வாழ்வுக்கு - ஸ்ரீவைஷ்ணவ லஷ்மிக்கு;
என் நெஞ்சம் மாலை உற்றது - என் மனம் மயங்கிக்கிடக்கின்றது;

விளக்க உரை

திருப்பாற்கடலில் பள்ளிகொள்பவனும் நறுந்தேன் மிக்க செவ்வித் துழாய் மாலையையணிந்த பெருந் திருமார்பையுடையவனும் புண்டரீகாக்ஷனுமாகிய ஸ்ரீரங்கநாதன் விஷயத்திலே மையல்கொண்டு இருந்தவிடத்திலிருக்க வொட்டாமையாலே எழுந்து ஆடுவது பாடுவதாய் விகாரப்படுகின்ற ஸ்ரீவைஷ்ணவர்களுடைய அந்த ஸ்ரீவைஷ்ணவலஷ்மிக்கே என் நெஞ்சு பித்தேறா நின்ற தென்கிறார். அப்படிப்பட்ட நிலைமை நமக்கு வாய்க்குமோ? என்று ஆசை கொள்ளா நின்றதென்றபடி. இரண்டாமடியில் மாத்திரம் மாலை என்பது நாதா என்ற வடசொல் விகாரம். மற்ற மூன்றடிகளிலுள்ள மாலை-மோஹம் என்னும் பொருளதான் மால் என்னுஞ் சொல் இரண்டாம் வேற்றுமை யுருபேற்றது.

English Translation

The lotus-eyed lord reclines in the ocean amid lapping waves, wearing a fragrant Tulasi garland with humming bumble-bees over his chest. Devotees wander dancing and singing madly, ecstatic over the Lord in Arangam. My heart desires a life like theirs.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்