விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஆதி அந்தம் அனந்தம் அற்புதம் ஆன*  வானவர் தம்பிரான்* 
  பாத மா மலர் சூடும் பத்தி இலாத*  பாவிகள் உய்ந்திடத்*
  தீதில் நன்னெறி காட்டி*  எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே* 
  காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும்*  காதல் செய்யும் என் நெஞ்சமே 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஆதி - ஜகத்காரணபூதனாய்;
அந்தம் - ப்ரளயகாலத்திலும் வாழ்பவனாய்;
அநந்தம் - ஸர்வவ்யாபியாய்;
அற்புதம் ஆன - ஆச்சரிய பூதனாய்;
வானவர் தம்பிரான் - அமரர்க்கதிபதியான ரங்கநாதனுடைய;

விளக்க உரை

ஸகல ஜகத்காரண பூதனாய் ஸர்வவ்யாபகனான எம்பெருமானிடத்து அன்பு இல்லாதவர்களான பாவிகளும் அவ்வன்பைப் பெற்று உஜ்ஜீவிக்குமாறு தேச தேசாந்தரங்களெங்கும் ஸஞ்சரித்து ஸ்வரூபாநுரூபமான அர்த்த விசேஷங்களை ஆங்காங்கு உபந்யாஸமுகேந உபதேசித்துவரும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே நான் பிறவிதோறும் அன்பு பாராட்டுவேன் என்கிறார். “எப்பிறப்பிலும்” என்ற சொற்போக்கால், அப்படிப்பட்ட ஸ்ரீவைஷ்ணவர்கள் பக்கல் பக்திபண்ணுவதற்காக இன்னும் பல ஜந்மங்களைத் தாம்பெற விரும்பியிருக்குமாறு விளங்கும்.

English Translation

The Lord of is the Lord of celestials, the eternal wonder-Lord, the beginning and the end. Wicked people, who lack devotion, do not wear the flowers of his feet on their heads. To redeem them and show the right and faultless path, devotees go about offering service with love in their hearts for the Lord. In every life here and hereafter, my heart is filled with love for them.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்