- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
மற்றுஞ்சிலபெண்கள் ஆண்டாளை நோக்கி, ‘அம்மா! நீ இராமபிரானை ஆசைப்பட்டாலுங் குற்றமில்லை, மாடுமேய்க்கப் பிறந்த கண்ணனைப்போய் நீ ஆசைப்படாநின்றாய், அவனோ கன்றுகளை மேய்ப்பதற்காக அவற்றின்பின்னே திரிவானொருசிறுவன், ஒரூரிலே தங்குவதுமில்லாமல் பசுக்களுக்கு நீரும்புல்லுமுள்ளவிடத்தே தங்குவானொருத்தன், வெண்ணையைக்களவாடுவதும் நெய்யைக் களவாடுவதுஞ்செய்து உரலிலே பிணிப்புண்டு திண்டாடுமவன், அன்னவனைப் பெறுகைக்கோ நீ இப்படிக்கிடந்து துடிக்கிறது? என்று ஏளனமாகச்சொல்ல, அவர்களைநோக்கிச் சொல்லுகிறாள் அவன் கன்றுகளை மேய்க்கப் பெற்றதும் காடுவாழ்சாதியாகப் பெற்றதும் உரலிடை ஆப்புண்டதும் குணமாகத்தோற்றவேண்டியிருக்க, உங்களுக்கு இவையெல்லாம் குற்றமாகத் தோற்றுவதற்குக் காரணம் உங்களுடைய பாவமேயாம், சிறந்தகுணமே உங்களுக்குக் குற்றமாகத் தோற்ற நீங்கள் சிசுபாலன் பிறந்த முஹூர்த்தத்திலேயோ பிறந்தது? “எத்திற முரலினோடு இணைந்திருந்தேங்கிய எளிவே!“ என்று ஈடுபடவேண்டிய விஷயம் உங்களுக்கு தூஷணார்ஹமாயிற்றே! இனி நீங்கள் இப்படிப்பட்ட அஸந்தர்ப்பமான நீசவார்த்தைகளை என் காதில் விழச் சொல்லுவீர்களாகில், நான் வாயில் வந்தபடி உங்களை நிந்தித்துவிடுவேன். அப்படி நிந்தனைகளுக்கு நீங்கள் ஆளாகாமல், அன்றொருகால் இந்திரன் ஏழுநாள் விடாமழை பெய்வித்தபோது அந்த மழையைத்தடுத்து அனைவரையுங்காத்த கோவர்த்தன மலையினருகே என்னைக்கொண்டு போட்டுவிடுங்களென்கிறான்.
English Translation
O Sinful Ladies! Do you dare heap slander on the Lord? -that he went after grazing cows, was born in a forester’s clan, and was punished for stealing butter? Keep your learning to yourself and be saved from my wrath. Take me now to Govardhana, where he held the mount against a torrent.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்