விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கார்த் தண் முகிலும் கருவிளையும்*  காயா மலரும் கமலப் பூவும்* 
  ஈர்த்திடுகின்றன என்னை வந்திட்டு*  இருடீகேசன் பக்கல் போகே என்று* 
  வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து*  வேண்டு அடிசில் உண்ணும் போது*
  ஈது என்று பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும்*  பத்தவிலோசனத்து உய்த்திடுமின்*.    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கார் - வர்ஷா காலத்தி லுண்டான
தண் - குளிர்ந்த
முகிலும் - மேகமும்
கருவிளையும - கருவிளைப்பூவும்
காயா மலரும் - காயம்பூவும்

விளக்க உரை

கறுத்துக் குளிர்ந்த மேகங்களும் கருவிளைப் பூவும் காயாம் பூவும் கண்ணபிரானுடைய திருமேனிக்குப் போலியாயிருக்கின்றமையாலும் தாமரைப்பூக்கள் அப்பிரானுடைய திவ்யாவயவங்களுக்குப் போலியாயிருக்கின்றமையாலும் அந்த மேகம் முதலியவற்றைக் காணும்போதே கண்ணபிரானுடைய ஸ்மரணம் அவர்ஜநீயமாகி அப்போதே அவனைச்சென்று சேரவேணுமென்கிற குதூஹலம்கிளர்கின்றபடியை ஒரு சமத்காரமாகப் பேசுகிறாள் முன்னடிகளில். “ஒக்குமம் மானுருவமென்று உள்ளம் குழைத்து நாணாளும், தொக்க மேகப் பல்குழாங்கள் காணுந்தோறும் தொலைவன் நான்“ என்ற திருவாய்மொழியும், “பூவையு“ காயாவும் நீலமும் பூக்கின்ற காவிமலரென்றுங் காண்டோறும் -பாவியேன், மெல்லாவி மெய்ம்மிகவே பூரிக்கும், காவிமலர் என்றுங்காண்டோறும் -பாவியேன், மெல்லாவி மெய்ம்மிகவே பூரிக்கும், அவ்வவையெல்லாம் பிரானுருவேயென்று.“ என்ற பெரியதிருவந்தாதியும் இங்கு அநுஸந்திக்கத்தான்.

English Translation

The cool dark clouds, the karuvilai, the Kaya and the lotus flowers, haunt me say in, “Go to him, Go to him.” Take me then to Bhaktavilochanam, where he sits, sweating, hungry, TIRED, and looking afar, waiting to be fed.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்