விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆர்க்கும் என் நோய் இது அறியலாகாது*  அம்மனைமீர்! துழதிப் படாதே* 
    கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன்*  கைகண்ட யோகம் தடவத் தீரும்* 
    நீர்க் கரை நின்ற கடம்பை ஏறிக்*  காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து* 
    போர்க்களமாக நிருத்தம் செய்த*  பொய்கைக் கரைக்கு என்னை உய்த்திடுமின்*.     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அம்மனைமீர் - தாய்மார்களே!
என் - என்னுடைய
இது நோய் - இந்த வியாதியானது
ஆர்க்கும் - எப்படிப்பட்ட ஞானிகளுக்கும்
அறியல் ஆகாது - அறிய முடியாத்து, (ஆனால்)
துழதிப்படாதே - (இது அப்படிப்பட்ட நோயா! என்று) நீங்கள் துக்கப்படாமல்,

விளக்க உரை

‘நோவு இன்ன தென்றுணர்ந்து அதுக்குத் தகுதியாகவன்றோ பரஹாரம் பண்ணவேணும், யமுனைக்கரையிலே கொண்டு போட்டுவிட்டால் என்ன பரிஹாரம் செய்யப்பட்டதாகும்? இவளோ பித்தம் பிடித்தவள் போலவாய் வந்தபடி சொல்லுகிறாளே, இவளுடைய உண்மையான நோய் இன்னதென்று நமக்கு விளங்கவில்லையே!‘ என்று வருத்தப்படத் தொடங்கினதான் மார்களை நோக்கிக் கூறுகின்றாள் - அம்மணைமீர்! நீங்கள் என்னுடைய நோயை அறிந்து பரிஹரிக்கவா பார்க்கிறீர்கள்?, என்நோய் உங்களால் அறியக்கூடிய தன்று, இந்நோயை விளைத்தவனுக்கும் இது இவ்வளவென்று பரிசோதிக்கமுடியாது, ஆதலால் இந்தநோய்க்காக நீங்கள் துக்கப்படவேண்டா, நான் சொல்லுகிறபடியே பரிஹரிக்கப்பார்ப்பதே உங்களுக்கு நன்றாம், நான் சொல்லு முபாயம் வயபிசரித்துப்போகக்கூடியதன்று, கைகண்டவுபாயமாய்த்து நான் சொல்லுவது, அஃது என்னவுபாயமென்றால், கடல் வண்ண்ணான கண்ணபிரான் தனது திருக்கையாலே என்னைத் தடவிக்கொடுக்கு மத்தனையே வேண்டுவது, அவ்வளவிலே எனது நோய் தீர்ந்துவிடுங்காண்மின், ஆகையாலே என்னை இங்கு நின்றுங்கொண்டுபோய், அக்கண்ணபிரான் காளியனுச்சியிலே நடனஞ்செய்யப்பெற்ற இடமாகிய பெய்கையின் கரையிலே என்னைச் சேர்த்துவிடுங்களென்றாள். காளியனுச்சியிலே கூத்தாடின இளைப்பு ஆறும்படி அவனை முலைத்தடங்களாலே அணைத்து விடாயாற்றவேணுமென்று மநோரதிக்கிறாள்போலும்.

English Translation

Nobody will understand this malaise, my Ladies, do not be sad. Take me now to that riverbank which turned into a ruddy battlefield when the dark Lord climbed the Kadamba tree, then jumped and trampled on the serpent Kaliya’s hood; his caress is the only remedy AVAILABLE to us.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்