- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
நெஞ்சில் நினைப்பது ஒன்றாய் வாயாற் சொல்வது வேறொன்றாய், பின்பு அநுஷ்டிப்பது மற்றொன்றாயிருக்கும் செவ்வைக்கேடர்களை ஒருங்கவிடுக்கை மநோவாக்காயங்கள் மூன்றும் ஒருபடிப்பட்டிருக்குமவராய் அக்குணம்விளங்குமாறு கோயிலிலே கண்வளர்ந்தருளுமவரான பெருமான், முன்பு அர்ஜுநனை வ்யாஜீகரித்து அவனுடைய தேர்த்தட்டிலே நின்றுகொண்டு, யதார்த்தமுமாய் ஸ்லாக்யமுமான ஒருவார்த்தையை அருளிச்செய்தார், அதாவது -“உன்காரியங்களை யெல்லாம் குறையறத் தலைக்கட்டிவைக்க நானிருக்கிறேன், நீன ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டியத்தில்லை, உனது ஸகலபாரங்களையும் என்பக்கல் ஸமர்ப்பித்து நிர்ப்பரனாய் இரு“ என்று உரைத்த சரமஸ்லோகம். அவ்வார்த்தையைக்கேட்டு அதன்படியே நிஷ்டையுடையராயிருப்பர் பெரியாழ்வார் என்கிறாள் முன்னடிகளில், அவருடைய மகளான தனக்கும் அந்த அத்யவஸாயமே புகல் என்று காட்டியவாறு. (தம்மையுகப்பாரை இத்யாதி) நாட்டில் ஒருவன் ஒருவனைநோக்கி “நீ ஆர்க்கு நல்லவன்?“ என்றால், அதற்கு அவன் “நான் நல்லார்க்கு நல்லன்“ என்று மறுமொழி கூறுவது ஸார்வலௌகிகம். “நல்லார்க்குத் நீயாருண்டோ?“ என்றும் ஒரு உலகநீதியுண்டு. இந்த உலகவழக்குச்சொல் அவ்வெம்பெருமானிடத்துப் பொய்யாகப் போய்விட்டால் “ஏன் நீர் இப்படி அநியாயம் பண்ணுகிறீர்?“ என்று அவரைக் கேட்பதற்கும் “இனிநீர் இன்னபடி வர்த்திக்கவேணும்“ போலே, * நெறியெல்லாம் எடுத்துரைத்தவனே நன்னெறிக்கு மாறுபாடாக நடக்காகில் நாமோ அவனுக்கு நெறியுரைப்பது.? “மாமேகம் ஸரணம் வ்ரஜ“ என்று அவர் நமக்கு விதித்த காரியத்தை நாம் குறையறச்செய்து தலைக்கட்டினோம். “மோக்ஷயிஷ்யாமி“ என்றும் “மாஸுச“ என்றும் ஸவக்ருத்யமாக அவர்சொல்லிற்றை அவர் நிறைவேற்றாதொழியில் நாம் என்செய்வது? என்கிறாள் போலும்.
English Translation
Vishnuchitta is well versed in the love of the Arangam Lord’s famous truisms. If “he-who-loves is-also-loved” be false with the Lord, What can anyone say with certainty thereafter?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்