விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண்ணாலம் கோடித்துக்*  கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்* 
    திண் ஆர்ந்து இருந்த*  சிசுபாலன் தேசு அழிந்து* 
    அண்ணாந்து இருக்கவே*  ஆங்கு அவளைக் கைப்பிடித்த* 
    பெண்ணாளன் பேணும் ஊர்*  பேரும் அரங்கமே*.   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கண்ணாலம் கோடித்து - கல்யாண ஸந்நாஹங்களையெல்லாம் பரிஷ்காரமாகச்செய்து முடித்து
கன்னிதன்னை - கல்யாணப் பெண்ணான ருக்மிணிப்பிராட்டியை
கை பிடிப்பான் - பாணிக்ரஹணம் செய்து கொள்ளப்போவதாக
திண் ஆர்ந்து இருந்த - ஸம்சயமில்லாமல் நிச்சயமாக நினைத்திருந்த
சிசுபாலன் - சிசுபாலனானவன்

விளக்க உரை

ருக்மிணிப்பிராட்டியின் ப்ரதிபந்தகங்களைப்போக்கி அவளுக்கு உதவினபடியை அநுஸந்தித்து, ‘அவளொருத்திக்கு உதவினதானது பெண்பிறந்தாரெல்லார்க்கும் உதவினபடியன்றோ‘ என்று அவ்வழியாலே தரிக்கிறாள். அர்ஜுநனொருவனைநோக்கிக் கண்ணபிரானருளிச்செய்த வார்த்தையை நாமெல்லாரும் விஸவஸித்திருக்கிறோமிறே, அதுபோல். ருக்மிணியைக் கைப்பிடித்த வரலாறு -விதர்ப்பதேஸத்தில் குண்டினமென்கிறபட்டணத்தில் பீஷ்மகனென்கிற அரசனுக்கு ருக்மி என்கிற பிள்ளையும், ருக்மிணி என்கிற பெண்ணுமிருந்தனர். அந்த ருக்மிணியானவள் ஸாக்ஷாத் ஸ்ரீமஹாலக்ஷ்மியின் அவதாரம். அவளுக்கு யுக்த வயது வந்தவுடன் க்ருஷ்ணன் சென்று இப்பெண்ணை எனக்கு விவாஹஞ் செய்துகொடுக்கவேணுமென்று கேட்க, ருக்மியென்பவன் அவனைச் சேதிதேசத்தரசனான ஸிஸுபாலனுக்குக் கொடுக்க விரும்பியவனாதலால் கிருஷ்ணனுடைய விருப்பத்திற்கு உடன்படாதொழிந்தான். சிலநாள் கழிந்தபின் அந்த ருக்மிணியின் கல்யாணத்துக்காக ஸ்வயம்வரம் கோடித்து ஸகலதேஸத்து அரசர்களையும் ருக்மி வரவழைத்தான். அவர்கள் வந்து சேர்ந்தவுடனே க்ருஷ்ணனும் பலராமாதிகளைக்கூட்டிக்கொண்டு அப்பட்டணத்துக்குப்போய்க் கல்யாணத்துக்கு முதல்நாள் அந்தருக்மிணியை மாயமாய் அபஹரித்துக்கொண்டு வந்துவிட்டான். பின்பு அங்குள்ள ‘தந்தவக்த்ரன்‘ முதலிய பல அரசர்கள் போர் செய்ய எதிர்த்துவர, அவர்களைப்பலராமனும் கண்ணபிரானும் முதுகுகாட்டியோடும்படி செய்துவிட்டனர். பிறகு ருக்மிணிப்பிராட்டியின் தமையனான ருக்மியானவன் “இஃது என்ன அநியாயமான காரியமாயிருக்கிறதே“ என்று எதிர்பொருது மீட்பதாக நினைத்துவந்து கண்ணனைத்தகைய, அப்போது ஸ்ரீக்ருஷ்ணன், இவனைக்கொன்றால் ருக்மிணி மனம்வருந்துவாள் என்று அவனைப்பிடித்துத் தனது தேர்க்காலிலேகட்டி அம்பாலே அவனது துதலையைச் சிரைத்திட்டு மானபங்கஞ்செய்துவிட்டுப் பின்பு ருக்மிணியை விதிபூர்வகமாகக் கல்யாணஞ் செய்து கொண்டான் - என்பதாம். இவ்வரலாற்றி இன்னுஞ்சில விஸ்தாரங்களுமுண்டு.

English Translation

Sisupala was all set to marry Rukmini. Then the Lord came and rode off with her, leaving him staring, shocked and shamed. No wonder they call the Lord’s abode Arangam or theatre.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்