விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பாசி தூர்த்தக் கிடந்த*  பார்மகட்குப்*
    பண்டு ஒரு நாள் மாசு உடம்பில் சீர் வாரா*  மானம் இலாப் பன்றி ஆம்* 
    தேசு உடைய தேவர்*  திருவரங்கச் செல்வனார்* 
    பேசியிருப்பனகள்*  பேர்க்கவும் பேராவே*. (2)      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பண்டு ஒருநாள் - முன்னொருகாலத்தில்
பாசி தூர்த்து கிடந்த - பாசிபடர்ந்து கிடந்த
பார் மகட்டு - ஸ்ரீபூமிப்பிராட்டிக்காக
மாசு உடம்பில் நீர்வாராமானம் இலாபன்றிஆம் - அழுக்கேறின சரீரத்தில் ஜலம் ஒழுகாநிற்கும் ஹேயமான தொருவராஹவடிவு கொண்ட
தேசு உடைய தேவர் - தேஜஸ்ஸையுடையகடவுளாகிய

விளக்க உரை

ஸ்ரீதேவிக்காகப்பட்ட பாட்டைச் சொன்னாள் கீழ்ப்பாட்டில், பூமிப் பிராட்டிக்காகப் பட்டபாட்டைச் சொல்லுகிறாள் இப்பாட்டில். ஹிரண்யக்சிபுவின் உடன்பிறந்தவனான ஹிரண்யாக்ஷனென்னும் கொடிய அசுரராஜன் தன்வலிமையாற் பூமியைப் பாயாகச் சுருட்டி யெடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிச்சென்றபோது, தேவர் முனிவர் முதலியேரது வேண்டுகோளினால் திருமால் நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத மஹாவராஹரூபமாகத் திருவவதரித்துக் கடலினுட்புக்கு அவ்வசுரனை நாடிக்கண்டுபொருது கோட்டினாற்குத்திக்கொன்று, பாதாளலோகத்தைச் சார்ந்திருந்த பூமியைக் கோட்டினாற்குத்தி அங்குநின்று எடுத்துக்கொண்டுவந்து பழையபடி விரித்தருளினன் என்ற வரலாறு அறியத்தக்கது. இப்பொழுது நடக்கிற ஸ்வேதவராஹகல்பத்துக்கு முந்தின பாத். மகல்பத்தைப்பற்றிய பிரளத்தின் இறுதியில் ஸ்ரீமந்நாராயணன் ஏகார்ணவமான பிரளயஜலத்தில் முழுகியிருந்த பூமியை மேலேயெடுக்க நினைத்து ஸ்ரீவராஹாவதாரத்தைச் செய்தருளிக் கோட்டுநுனியாற் பூமியை எடுத்துவந்தன்னென்ற வரலாறும் உண்டு.

English Translation

The Lord of Arangam is respectable and affluent. But long ago he came as a shameless unwashed dirty swine, and lifted dame Earth from the mossy deluge-waters. Who can tell the things that he spoke to her then?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்