விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பொங்கு ஓதம் சூழ்ந்த*  புவனியும் விண் உலகும்* 
    அங்கு ஆதும் சோராமே*  ஆள்கின்ற எம்பெருமான்* 
    செங்கோல் உடைய*  திருவரங்கச் செல்வனார்* 
    எம் கோல் வளையால்*  இடர் தீர்வர் ஆகாதே?*   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பொங்கு - அலையெறியா நின்றுள்ள
ஓதம் - கடலாலே
சூழ்ந்த - சூழப்பட்ட
புவனியும் - இப்பூமண்டலமும்
விண் உலகும் - ப்ரமபதமும்

விளக்க உரை

கடல்சூழ்ந்தமண்ணுலகும் விண்ணுலகுமாகிய உபயவிபூதியையும் அபாயலேஸமுமின்றி ரக்ஷித்தருளுமவனாய், என்னை ஒரு மூன்றாம் விபூதியாக ஆளுவனாய், திருவரங்கத்திலே பள்ளி கொண்டருளினபடியே செங்கோல்செலுத்துமவனான எம்பெருமான் இப்படி அவாப்தஸமஸ்தகாமனாயிருந்து வைத்தும் குறைவாளன்போன்று என்னுடைய கைவளையைக் கொள்ளை கொண்டுபோனான், போயிடுக, இவ்வளையினால் அவனுடைய தாரித்ரிய மெல்லாம் ஹதமாகட்டும் என்கிறாள். இரண்டாமடியின் முதலிலுள்ள அங்கு என்பது ஓர் அசைச்சொல், அதற்கு இவ்விடத்தில் பொருள் இல்லை. எம்பெருமான் என்றவிடத்துவியாக்கியான ஸ்ரீஸூக்தி, ‘ஸப்தாதிகளாலே களிக்கும்படி பண்ணிவைத்தான் அவ்விபூதியை, இங்குள்ளார்க்கும் கூட்டன்றிக்கே அங்குள்ளார்க்குங்கூட்டன்றிக்கே நடுவே நோவுபடும்படி பண்ணிவைத்தான் என்னை யொருத்தியையும்.“

English Translation

The wealthy prince of Arangam is the sovereign Lord who rules eternally, over the ocean-girdled Earth and Sky. Will the usurpation of my bangles satisfy him?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்