விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  எழில் உடைய அம்மனைமீர்!*  என் அரங்கத்து இன்னமுதர்* 
  குழல் அழகர் வாய் அழகர்*  கண் அழகர் கொப்பூழில்* 
  எழு கமலப் பூ அழகர்*  எம்மானார்* 
  என்னுடைய கழல் வளையைத் தாமும்*  கழல் வளையே ஆக்கினரே*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

எழில் உடைய - அழகையுடைய
அம்மனைமீர் - தாய்மார்களே!
அரங்கத்து - திருவரங்கத்திலெழுந்தருளியிருக்கிற
என் இன் அமுதர் - என்னுடைய இனிய அமுதம் போன்றவராய்
குழல் அழகர் - அழகிய திருக் குழற்கற்றையையுடையவராய்

விளக்க உரை

“சங்கஞ்சரிந்தன சாயிழந்தேன் தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்“ என்னும்படி நான் அழகழிந்து கிடக்கச்செய்தே நீங்கள் அழகு பொலிந்து நிற்பதும் உங்கள் பாக்கியமே - என்பாள் போல எழிலுடையவம்மனைமீர் என விளிக்கின்றாளென்க. திருவரங்கத்திலே எனக்கு போக்யமான அமுதம்போன்று எழுந்தருளியிருப்பவராய், திருக்குழலழகும் திருவதரத்தினழகும் திருக்கண்ணழகுமு திநாபிக்கமலத்தழகும் பொலிய நின்று இவ்வழகையெல்லாங் காட்டி என்னை ஆட்படுத்திக்கொண்டவரான பெரியபெருமாள் தப்பாக ஒன்றுஞ்செய்யவில்லை யுத்தமாகவே செய்தார். நான் கழலாதவளையை இட்டுக்கொண்டிருந்தேனாகில் அவரும் அதனைக் கழலாத வளையாகவே அமைத்துவைப்பர், நான் கழல்வளையையிட்டுக்கொண்டேனாகையாலே அவர் அதை அந்வர்த்தமாக்கினார், என்மேல் குற்றமேயன்றி அவர்மேல் என்ன குற்றமிருக்கிறது? உள்ளத்தை உள்ளபடி செய்பவரன்றோ அவர். நான் கழலாதவளையே இட்டுக்கொண்டிருந்து அவர் அதைக் கழல்வளையாக ஆக்கினாராகில் அப்போது ஒருவாறு அவர்மேல் குற்றஞ்சாட்டலாம், நானே கழல்வளையிட்டுக் கொண்டேனான அருளிச்செய்கிறாள். இது நர்மோக்தி எனவும்படும். கைவளைக்குக் கழல்வளையென்று இடுகுறிப்பெயர். அதனைக் காரணப்பெயர்போலக்கொண்டு “தாமுங் கழல்வளையேயாக்கினரே“ என்றாள். கழன்றொழியும் வளையாதலால் கழல்வளை எனப்பெயர்வந்த்து என்கிறாளாய்த்து. “***“ (யுக்தோ வாரணலாபோயம் ஸ்யால! தேவாரணார்த்திந) என்ற வடமொழி ஸ்லோகத்தை இதனோடு ஒருபுடை ஒப்பிடலாம். வடமொழியில் வாரணம் என்றால் யானைக்கும் பெயர். கழுத்தைப்பிடித்துத் துள்ளுதலுக்கும் பெயர் ஒருவன் தனக்கு ஒருயானை கொடுக்கவேணும் என்று நாடோறும் ஒரு அரசனிடத்துச் சென்றுகொண்டிருந்தான், இப்படி நீ யானை கேட்பது தகுதியல்லவென்று சேவகர் நெடுநாள் அவனுக்கு ஹிதமாகச் சொல்லியும் அவன் கோளாதொழியவே, ஒருநாள் சேவகர் அவனைக் கழுத்தைப்பிடித்து நெட்டித்தள்ளிவிட்டனர். அதைக்கண்ட ஒருவன் அவனைநோக்கிக் கூறுகின்றான் வாரணம் விரும்பிய நீ வாரணம்பெற்றது தகுதியே என்கிறான். அதுபோல ஆண்டாளும் “என்னுடைய கழல்வளையைத் தாமுங் கழல்வளையே யாக்கினரே“ என்கிறாள்.

English Translation

O Bright Ladies! My sweet Arangar Lord has beautiful locks, beautiful lips, beautiful eyes, and a beautiful lotus on his navel. Alas, he wears my Kalalvalai, loosened bangles, as his Kalalvalai, victory anklets

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்