விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண மாமயில்காள்!*  கண்ணபிரான் திருக்கோலம் போன்று* 
    அணி மா நடம் பயின்று ஆடுகின்றீர்க்கு*  அடி வீழ்கின்றேன்* 
    பணம் ஆடு அரவணைப்*  பற்பல காலமும் பள்ளிகொள்* 
    மணவாளர் நம்மை வைத்த பரிசு*  இது காண்மினே*             

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கணம் - கூட்டமாயிருக்கிற
மா மயில்காள்! - சிறந்தமயில்களே!
கண்ணபிரான் - கண்ணபிரானுடைய
திருகோலம் போன்று - அழகிய வடிவு போன்ற வடிவையுடையீராய்க் கொண்டு
அணி மா நடம் பயின்று - அழகிய சிறந்த நாட்டியத்திலே பழகி
 

விளக்க உரை

சிலமயில்கள் கூட்டங்கூட்டமாக இருந்துகொண்டு கூத்தாடுவதைக்கண்டு தரிக்கமாட்டாதாளாய் ‘இக்கூட்டத்தாடுதலை நிறுத்துங்கள், உங்கள்காலிலே விழுகிறேன்‘ என்கிறாள். “நின்றாடுகணமயில்போல் நிறமுடையநெடுமால்“ (பெரியாழ்வார் திருமொழி) என்னப்பட்ட எம்பெருமானுக்கு இவை ஸ்மாரகங்களாய்க்கொண்டு நலிகிறபடியால் “கண்ணபிரான் திருக்கோலம்போன்று“ என்கிறாள். அடிவீழ்கின்றேன் - இக்கூத்து ஒழியவேணுமென்று ப்ரபத்திபண்ணுகிறேனென்றபடி. இப்படி இவள்சொன்னவாறே, அந்தோ! பெரியாழ்வார் திருமகளாகப் பெற்ற பெருமைவாய்ந்த நீ இப்படிச் சொல்லத்தகுமோ? உன்காலிலேயன்றோ நாங்கள் விழக்கடவோம்“ என்று அம்மயில்கள் சொல்வனவாகக்கொண்டு, கூறுகின்றாள். (பணமாடரவணையித்பாதி) “சென்றால்குடையாம் இருந்தால் சிங்காசன்மாம்“ என்றபடி - திருவனந்தாழ்வானை ஸர்வப்ரகாரங்களாலும் அடிமைகொண்டு சிறப்பிக்குமவர் என்னை உங்கள் காலிலே விழும்படிசெய்த பின்பு நான் செய்யலாவதுண்டோ? என்கிறாள். “பணவாளரவணை“ என்றும்பாடமுண்டு, அப்பாடத்தில், படங்களையும் ஒளியையுமுடைய அரவு என்க. வாள் - ஒளி.

English Translation

O Flocks of Peacocks sporting my Lord Krishna’s hues! Yes, you are artful dancers; but I fall at your feet, pray stop. The bridegroom sleeps eternally on a hooded serpent. See the plight he has brought on me!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்