விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பாடும் குயில்காள்!*  ஈது என்ன பாடல்?* நல் வேங்கட- 
    நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால்*  வந்து பாடுமின்* 
    ஆடும் கருளக் கொடி உடையார்*  வந்து அருள்செய்து* 
    கூடுவராயிடில்*  கூவி நும் பாட்டுக்கள் கேட்டுமே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பாடும் - பாடுகின்ற
குயில்காள்! - குயில்களே!
ஈடு - (கர்ண கடோரமான) இக்கூசல்
என்ன பாடல்? - என்னபாட்டு
நல்வேங்கடம் நாடர் - விலக்ஷணமான திருவேங்கடமலையை இருப்பிடமாகவுடைய பெருமான்
நமக்கு - என்விஷயத்திலே

விளக்க உரை

எந்தப்பக்கம் நோக்கினாலும் ஒவ்வொரு புஷ்பம் கண்ணிலே தோற்றி ஹம்ஸகமாயிருந்தபடியாலே ‘கண்ணைமூடிக் கொண்டோமாகில்‘ சுகப்படலாம் என்று நினைத்துக் கண்ணை மூடிகொண்டாள். உடனே குயில்களின் பாட்டுக்கள் செவிப்பட்டன. அவற்றைக்கேட்டுத் தரிக்கமாட்டாதாளாய் அக்குயில்களே நோக்கி ‘நீங்கள் ஏன் இப்படி கர்ணகடோரமாகக் கத்துகின்றீர்கள்? போரும் போரும்; உங்கள் பாட்டை நிறுத்துங்கள்‘ என்கிறாள். இரண்டருகும் நெருப்புப்பற்றி யெரியா நிற்கச் செய்தே நடுவேயிருந்து சந்தனம் பூசுவாரைப்போலே யிருந்ததீ!, உங்கள் பாட்டைக் கேட்கும்படியாகவோ இப்போது என்னுடைய தஸையிருப்பது; ஐயோ! என்னபாட்டுப் பாடுகிறீர்கள். ஸம்ஸ்லேஷரஸாநுபவம் செல்லும்போது பாடத்தக்க பாட்டுக்களை நீங்கள் விஸ்லேஷத்தில் பாடாநின்றீர்களே!; பாவிகள்! பாடினது போரும்; எம்பெருமான் இங்கேயெழுந்தருளி என்னை வாழ்விக்குங்காலம் வாய்க்குமாகில் அப்போது நீங்கள் இங்குவந்து ஆசைதீரப் பாடுங்கள் என்கிறாள் முன்னடிகளில்.

English Translation

Enough, O Singing Koels! What song is this? If the Lord of Venkatam promises a new life, come again. He is the Lord bearing the dancing Garuda-banner. If he comes to me, we will both sit and hear you sing.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்