- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
கோடல்பூக்கள் என்று ஒரு புஷ்பஜாதி உண்டு, அது காந்தள்பூ என்றுஞ் சொல்லப்படும். அப்புஷ்வங்கள் கார்காலத்திலே மிகுதியாக மலரும். அவை விரஹகாலத்திலே காமுகர்கட்கு மிகவும் உத்தீபகங்களாயிருக்கும்; பலகைப்பட்ட நிறங்களையுடைய அப்புஷ்பஜாதியில் கரியநிறமுள்ள பூக்களும் உண்டு. அவை எம்பெருமானுடைய திருநிறத்துக்கு ஸ்மாரகங்களாய்க்கொண்டு ஆண்டாளை விஸேஷமாக வருத்துகின்றமையால் ‘இம்மலர்களை எம்பெருமான் படைத்தது நம்மைக் கொலைசெய்வதற்காகவே போலும்‘ என்ற அறுதியிட்டு அம்மலர்களையே நோக்கி கூறுகின்றாள்; “ஓ கோடல்பூக்களே! என்னைக் கொலை செய்வதற்கென்று உங்களை அழகாகக் கோடித்து அனுப்பின மஹாநுபாவன் எங்கிருக்கிறான்?“ என வினவுகின்றாள் முன்னடிகளில். உண்மையில் அப்புஷ்பங்கள் அசேதநங்களாகையாலே மறுமொழி ஒன்றும் சொல்லாதிருக்கவே, ‘அந்தோ‘ நம்மை இந்தப்பூக்களும் லக்ஷியம்பண்ணுகின்றன வில்லையே; அந்த எம்பெருமானோ வரமாட்டேனென்கிறான், இவையோ நம்மோடு பேசுகின்றனவில்லை; உசாத்துணை ஆகக்கூடியவர்களும் யாருமில்லை, இனி நாம் ஆர்வீட்டுவாசலிலேபோய் நம் துயரை முறையிட்டு ஆறுவது!‘ என்கிறாள் மூன்றாமடியில்.
English Translation
O Dark Kodai flowers! Where is the ocean-hued Lord, who aimed you warring arrows on me? Who will hear my plaint, alas? Even my heart unbridled has teamed with him, for the favour of his Tulasi crown.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்