- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
மழைகாலத்தில், கருவிளைப்பூக்களென்கிற காக்கணம் பூக்களும் காயாம் பூக்களும் விசேஷமாகப் புஷ்பிக்குமாதலாலும், அவை எம்பெருமானுடைய திருமேனிநிறத்தோடொத்த நிறத்தையுடையனவாயிருக்கு மாதலாலும் அவற்றின்காட்சி தனக்கு விரஹதசையில் உத்தீபகமாயிருப்பது பற்றி உண்டாகும் வருத்தத்தை அம்மலர்களை விளித்தே உரைக்கின்றாள். எம்பெருமானுடைய திருநிறத்தை நினைப்பூட்டா நின்று கருவிளைப்பூக்களை! காயாம்பூக்களே! நீங்கள் என்னை முடிக்கும்வகை ஒன்றுமோதான் கற்றது? நான் பிழைக்கும்வகையை அறிவீர்களாகிற் சொல்லுங்கள் என்கிறாள் முன்னடிகளில். இங்ஙனம் யாசிக்கப்பட்ட அம்மலர்கள் ஆண்டாளைநோக்கி, ‘நாங்கள் உமக்கு ஜீவநோபாயம்சொல்லவேண்டும்படி இப்போது உமக்குநேர்ந்த அநர்த்தம் என்ன?‘ என்று கேட்டனவாகக் கொண்டு, அவ்வநர்த்தத்தை முறையிடுகின்றான் பின்னடிகளில்; திருமாலிருஞ் சோலையில் அவாப்தஸமஸ்தகாமரா யெழுந்தருளியிருக்கிற பெரியவர், நானொருத்தி இருப்பதாகவும் நினையாமல் தமது திருத்தோளைப் பெரியபிராட்டியார்க்கு நித்யாநுபவயோக்யமாகக் கொடுத்து அவளும் தாமும் பரமரஸபுஞ்ஜமாய் அநுபவம் நடத்தா நிற்பதைப்பற்றி நான் ஒன்றும் விசாரப்படாமல், ‘அவர் முன்புவிரும்பிப்போந்த வளைகள் நம்கையில் இருக்கின்றனவே. அவற்றைக் கண்டுகொண்டாவது தரித்திருப்போம்‘ என்றெண்ணி நான் என்வீட்டுக்குள்ளே கதவடைத்துக்கொண்டு கிடந்தால், அப்பெரியவர் அதனையும் பொறாமல் சடக்கென ஓடிவந்து என் வீட்டினுள் புகுந்து பலாத்காரமாக அவ்வளைகளைப் பறித்துக் கொண்டு ஓடினரே, இஃது எந்த நீதியிற்சேரும்? இதற்குமேற்பட எனக்கு வேறோர் அநர்த்தம் விளையவேண்டுமோ என்கிறாள்.
English Translation
O Beautiful Karuvilai flowers! O Kaya flowers! Your dark hues torment me with memories of the Lord; Show me a way out! The Lord of Malirumsolai has beautiful arms that sport with Sri. He broke into my house and snatched my bangles, is this fair?
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்