விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சிந்துரச் செம்பொடிப் போல்*  திருமாலிருஞ்சோலை எங்கும்* 
  இந்திர கோபங்களே*  எழுந்தும் பரந்திட்டனவால்* 
  மந்தரம் நாட்டி அன்று*  மதுரக் கொழுஞ்சாறு கொண்ட* 
  சுந்தரத்தோளுடையான்*  சுழலையினின்று உய்துங் கொலோ!* (2)    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

திரு மாலிருஞ்சோலை எங்கும் - திருமாலிருஞ்சோலையில் பார்த்த பார்த்த விடமெங்கும்
இந்திர கோபங்கள் - பட்டுப்பூச்சிகளானவை
செம் - சிவந்த
சிந்துரம் பொடி போல் - ஸிந்தூரப்பொடிபோல
எழுந்து - மேலெழுந்து

விளக்க உரை

மழைக்காலத்திலே பட்டுப்பூச்சிகள் விசேஷமாகப் பறக்கும், அவை காதலனுடைய அதரத்தின் பழுப்புக்கு ஸ்மாரகங்களாய் இருக்குமாதலால் தலைவிக்கு உத்தீபகமாயிருக்கும். ஐயோ! திருமாலிருஞ்சோலைப் புறமெங்கும் பட்டுப்பூச்சி மயமாய்விட்டதே, விச்லேஷகாலத்திலே இவை வந்துதோற்றினால் இனி உயர்தரிக்க வழியுண்டேவென்று வருந்துகின்றாள். “இந்திரகோபங்கள் எம்பெருமான் கனிவாயொப்பான், சிந்தும்புறபில் தென் திருமாலிருஞ்சோலையே“ என்று பெரியாழ்வார் திருமொழி இங்கே நினைக்கத்தக்கது. எம்பெருமானுடைய வடிவுக்குப் போலியான திருமலைக் கண்ணாலே ஸேவித்துக்கொண்டிருந்தாகிலும் ஒருவாறு தரித்திருப்போமென்று பார்த்தால் அதற்கும் ஆசையில்லாதபடி பாழும் பட்டுப்பூச்சிகள் அம்மலைச் சூழ்ந்து கொண்டு மறைக்கின்றனவே! என்று கருத்தாகவுங் கொள்ளலாம்.

English Translation

Alas, like Sindoor powder spilled over Malirumsolai, red cochineal insects swarm and flies everywhere, the Lord with beautiful arms planted the mountain shaft, and churned for ambrosia; how can I stand in its vortex and live?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்