விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மத யானை போல் எழுந்த*  மா முகில்காள்!*  வேங்கடத்தைப்- 
    பதியாக வாழ்வீர்காள்!*  பாம்பு அணையான் வார்த்தை என்னே* 
    கதி என்றும் தான் ஆவான்*  கருதாது*  ஓர் பெண்கொடியை-
    வதை செய்தான் என்னும் சொல்*  வையகத்தார் மதியாரே* (2)    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வேங்கடத்தை - திருமலையை
பதி ஆக - இருப்பிடமாகக் கொண்டு
வாழ்வீர்கள் - வாழ்கின்றவையாயும்
மதம் யானை போல் எழுந்த - மத்தகஜம்போலே செருக்கிக்கிளர்ந்தவையாயுமுள்ள
மா முகில்காள் - காளமேகங்களே!

விளக்க உரை

மேகங்களைக் கொண்டாடி இருகால் ஸம்போதிக்கிறாள்; திருவேங்கடமுடையானை நீங்கள் இடைவிடாது ஸேவித்துக்கொண்டு அத்தாலே மத்தகஜம் போலச் செருக்கி யிருக்கிறீர்களன்றோ என்பது முதல் விளியின் கருத்து. குக்ராம்மே குடியிருப்பானவர்கள் வந்தேறிகளாய்த் திருநாள் ஸேவித்து விட்டுப் போவதுபோலன்றியே திவ்யதேஸித்திலேயே நித்யவாஸம் பண்ணப் பெற்றீர்களே! என்னபாக்கியம்!! - என்ற கொண்டாட்டம் இரண்டாம் விளியின் கருத்து. பாம்பணையான் வார்த்தை என்னே! - திருவநந்தாழ்வானிடத்து ஸகலவித கைங்கரியங்களையுங் கொள்வதுபோல என்னிடத்தும் கொள்வன் என்றிருந்தேன், “நாகபர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம்“ என்றபடி ஸேஷ் ஸயநத்தை விட்டுத் திருமதுரையிலே வந்துபிறந்த கண்ணபிரான் தேர்த்தட்டில் நின்று சொன்ன வார்த்தையை (சரமஸலோகத்தை) மெய்யென்று நீம்பியிருந்தேன்; பாம்போடே அனைந்து பாம்பின் தன்மையே தனக்குமுண்டாகப் பெற்றான்; அதற்கு நாக்கு இரணடாயிருப்பதுபோல இன்னும் இரண்டுநாக்குப் பெற்றான், - அதாவது பொய்யனாய்விட்டான் - என்ற கருத்துக்காண்க.

English Translation

O Dark elephant-like clouds from Venkatam! Of what avail are the assurances of one who keeps the company of a two-tongued serpent? He promised refuge to the seeker, but has not kept his word. No more will the world revere him, by the infamy of killing a helpless maiden.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்